பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மும்பையில் உள்ள கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜநாத் சிங் முன்னிலையில் ஐஎன்எஸ் விசாகப்பட்டனம் இந்திய கப்பற் படையில் இணைக்கப்பட்டது


உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ள, ஏவுகனையைத் தாக்கி அழிக்கும் இதில் நவீன ஆயுதங்களும் நவீன ராடார்களை கொண்ட உணர்வுக் கருவிகளும் இடம்பெற்றிருக்கும்

இந்தியாவின் வளர்ந்துவரும் கடல்சார் ஆற்றலின் அடையாளமாக இது இருக்கிறது என்று பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்

Posted On: 21 NOV 2021 1:28PM by PIB Chennai

பாதுகாப்பு அமைச்சரின் உரையில் முக்கிய அம்சங்கள்:

  • ஐஎன்எஸ் விசாகப்பட்டனம் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்தும், தேச நலன்களைப் பாதுகாக்கும்
  • ‘இந்தியாவில் உற்பத்தி, உலகுக்கான உற்பத்தி’ என்ற இலக்கை அடைவதை நோக்கிய பிரம்மாண்ட பாய்ச்சல்
  • பொதுத்துறை – தனியார் துறை பங்களிப்பு விரைவில் உலகளாவிய கப்பல் கட்டும் தளமாக இந்தியாவை மாற்றும்
  • இந்திய பசிபிக் பகுதியை வெளிப்படைத் தன்மை கொண்டதாகவும் பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்து உள்ளதாகவும் வைத்திருப்பது இந்தியக் கப்பற்படையின் முதன்மை நோக்கமாகும்
  • பங்கேற்கும் அனைத்து நாடுகளின் நலன்களையும் பாதுகாப்பதாக சட்ட அடிப்படையிலான இந்திய பசிபிக் பிராந்தியம் என்பதை நாம் எண்ணிப்பார்க்கிறோம்
  • நிலைத் தன்மைக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் சட்டத்தின் அடிப்படையிலான கடல் பயன்பாட்டு சுதந்திரம் மற்றும் கடல் பாதைகளின் பாதுகாப்பு அவசியமாகும்.

ஐஎன்எஸ் விசாகப்பட்டனம், P15B ராடார் பார்வையில் படாமல் ஏவுகணையை அழிக்கும் திறன்கொண்டது. இந்தக் கப்பல் மும்பையில் உள்ள கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் முன்னிலையில் இந்தியக் கப்பற்படையில்  2021, நவம்பர் 21 அன்று இணைக்கப்பட்டது. இந்தியக் கப்பற்படையின் அமைப்பான கப்பல் வடிவமைப்பு இயக்ககத்தால் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, மும்பையில் உள்ள மசகான் கப்பல் கட்டும் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு கப்பற்படையில் இணைக்கப்படவுள்ள ஏவுகணையை அழிக்கும் திறனுள்ள நான்கு விசாகப்பட்டினம் கப்பல்களில் முதலாவது கப்பல் முறைப்படி இணைக்கப்பட்டிருப்பதை இந்த நிகழ்வு குறிக்கிறது.

இந்த நிகழ்வில் பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நாட்டில் வளர்ந்துவரும் கடல்சார் ஆற்றலின் அடையாளமாக ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் உள்ளது என்றும் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் திட்டமான ‘இந்தியாவில் உற்பத்தி, உலகத்திற்கான உற்பத்தி’ என்ற இலக்கை அடைவதில் முக்கியமான மைல்கல் என்றும் கூறினார். தொன்மையான மற்றும் மத்திய கால  இந்தியாவின் கடல்சார்ந்த ஆற்றல், கப்பல் கட்டும் திறன், புகழ்மிக்க  வரலாறு ஆகியவற்றை நினைவுபடுத்துவதாக இந்தக் கப்பல் உள்ளது என்று அவர் தெரிவித்தார். நவீன உத்திகளையும் ஆயுதங்களையும் கொண்டுள்ள இந்தக் கப்பல் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்தும் தேசத்தின் நலன்களைப் பாதுகாக்கும் என்று திரு ராஜ்நாத் சிங் நம்பிக்கை  தெரிவித்தார். உலகில் ஏவுகனையைத் தாக்கி அழிக்கும் திறன்கொண்ட கப்பல் வகையில் மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டதாகும் இது என்றும் இராணுவத்தின், ஒட்டுமொத்த தேசத்தின் நிக்ழ்கால மற்றும் எதிர்காலத் தேவைகளை இது பூர்த்திசெய்யும் என்றும் அவர் கூறினார்.

இந்தியக் கப்பற்படையின் தற்சார்பு முயற்சிகளைப் பாராட்டிய திரு ராஜ்நாத் சிங் இந்தியக் கப்பல்கட்டும் தளங்களிலிருந்து 41 கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களில் 39 ஆர்டரை கப்பற்படை பெற்றிருப்பது தற்சார்பு இந்தியா சாதனையை நோக்கிய உறுதிப்பாட்டின் சான்றாகும் என்றார்.  விமானம் தாங்கி கப்பலான உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ரந்த் தற்சார்பு இந்தியா சாதனை பாதையை எட்டுவதற்கு முக்கியமான மைல்கல்லாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

பிரதமரின் தொலைநோக்குத் திட்டமான சாகர் (இந்தப் பிராந்தியத்தில் அனைவருக்குமான பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி) திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் இந்தியக் கப்பற்படையின் முயற்சிகளைப் பாதுகாப்பு அமைச்சர் பாராட்டினார்.

இந்த விழாவில் கப்பற்படை தளபதி அட்மிரல் கரம்வீர் சிங், நாடாளுமன்ற உறுப்பினர் திரு அர்விந்த் சாவந்த், மேற்குப்பகுதி கப்பற்படை தளபதி வைஸ்அட்மிரல் ஆர் ஹரிகுமார், மசகான் கப்பல் கட்டும் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான ஓய்வுபெற்ற வைஸ் அட்மிரல்  நாராயண் பிரசாத் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் 163 மீட்டர் நீளமும், 17 மீட்டர் அகலமும் கொண்டதாகும். 7400 டன் எடை கொண்ட இது மிகவும் சக்திவாய்ந்த போர்க்கப்பல்களில் ஒன்றாக கருதப்படும். மணிக்கு 30 நாட்டிகல் மைல் வேகத்தில் செல்லக்கூடியது.   

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1773700

****


(Release ID: 1773721) Visitor Counter : 517