கலாசாரத்துறை அமைச்சகம்

லலித் கலா அகாடமியில், ஒருவாரகால ‘பாரதமாதா மற்றும் பாரதத்தின் நாயகன்‘ கண்காட்சியை திருமதி.மீனாட்சி லேகி தொடங்கிவைத்தார்

Posted On: 18 NOV 2021 2:46PM by PIB Chennai

சுதந்திரப் பெருவிழா திட்டத்தின் கீழ், லலித் கலா அகாடமியில் (தேசிய கலைப் பயிற்சி நிறுவனம்), ஒரு வார கால கண்காட்சியை, மத்திய கலாச்சாரத் துறை இணையமைச்சர் திருமதி.மீனாட்சி லேகி, நவம்பர் 18, 2021 அன்று தொடங்கிவைத்தார்லலித் கலா அகாடமிகமல் கலைக் கூடத்துடன் இணைந்து,  ‘பாரத மாதா மற்றும் பாரதத்தின் நாயகன்என்ற தலைப்பிலான கண்காட்சியை அமைத்துள்ளதுஇந்தக் கண்காட்சியில்பிரபல கலைஞர் திரு. பவன் வர்மாஷாகீன்“  வரைந்த ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன

லலித்கலா அகாடமியின் தற்காலிகத் தலைவர் டாக்கடர் உத்தம் பச்சார்னே மற்றும் கமல் கலைக்கூடத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு. கமல் சிப் ஆகியோர் முன்னிலையில், இந்தக் கண்காட்சி தொடங்கி வைக்கப்பட்டது.  

ரவீந்திரநாத் தாகூர், சர்தார் வல்லபாய் படேல், .பி.ஜெ.அப்துல்கலாம் மற்றும் பிரதமர் திரு.நரேந்திர மோடி-யின் புகைப்படங்கள், இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

இந்தக் கண்காட்சியை, 18 – 24 நவம்பர் 2021 வரை கால 11 மணி முதல் இரவு 7 மணி வரை, பொதுமக்கள் பார்வையிடலாம்

                                                                                                       *****



(Release ID: 1773050) Visitor Counter : 149