பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

விடுதலையின் அமிர்த மகோத்சவத்தின் ஒரு பகுதியாக ஜன்ஜாதிய கவுரவ் தினத்தன்று மாநில அளவிலான 5-நாள் கைவினை பொருட்கள் திருவிழா விசாகப்பட்டிணத்தில் தொடங்கியது

Posted On: 16 NOV 2021 2:01PM by PIB Chennai

பழங்குடியினரின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை கொண்டாடும் மற்றும் சுதந்திர போராட்டத்தில் அவர்களின் பங்கை நினைவுகூரும் வகையில் நவம்பர் 15-ம் தேதியை ஜன்ஜாதிய கௌரவ் திவஸ் (பழங்குடியினரின் பெருமை தினம்) என பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை அறிவித்தது.

 

நவம்பர் 15-ம் தேதி தொடங்கும் பழங்குடியினர் பெருமை வாரத்தில் பழங்குடியினர் விவகார அமைச்சகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளும். ஐந்து நாள் மாநில அளவிலான கைவினை மேளா (கண்காட்சி மற்றும் விற்பனை) நவம்பர் 15 முதல் நவம்பர் 19, 2021 வரை விசாகப்பட்டினத்தில் உள்ள ஆர்கே கடற்கரை மைதானத்தில், (விஸ்வப்ரியா விழா மண்டபம் எதிரில்) நடைபெறுகிறது.

 

பழங்குடியினரின் பல்வேறு வகையான கைவினைப்பொருட்கள் சவரா, கொண்டா ரெட்டி, டோரா, நூகா டோரா, கோயா, ஜடாபு, கொண்டா கம்மாரா, கௌடா, வால்மீகி, பகதாஹா, கோடியா போன்ற பழங்குடியினக் குழுக்களிடமிருந்து சேகரிக்கப்பட்டுள்ளன.

 

கண்காட்சியில் மொத்தம் 25 அரங்குகள் உள்ளன, மூங்கில் தயாரிப்புகள், பாரம்பரிய பழங்குடிப் பொருட்களான மஞ்சள், தினை உள்ளிட்டவற்றை காட்சிப்படுத்தியுள்ள அரங்குகளும், ஜி.சி.சி, ட்ரைஃபெட் மற்றும் படேரு ஏஜென்சியின் அரங்குகளும் உள்ளன.

 

 

பழங்குடியினரின் கலாச்சார நிகழ்ச்சிகளான டிம்சா, கொம்மு நடனம், சவரா - ஆண்டேலா ரவாலி நடனம், செஞ்சு நடனம், மயூரா நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தினமும் நடைபெறும்.

வினாடி-வினா போட்டிகள் தவிர, ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் பிர்சா முண்டா பிறந்தநாளின் ஒரு பகுதியாக ஆஷ்ரம் பள்ளிகள் மற்றும் உறைவிடப் பள்ளிகளில் கலை மற்றும் ஓவியப் போட்டிகளும் நடத்தப்படுகின்றன.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1772266

 

****



(Release ID: 1772410) Visitor Counter : 272


Read this release in: English , Urdu , Hindi