குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

பெண்களுக்கு சம சொத்துரிமைகள் வழங்க குடியரசுத் துணைத் தலைவர் வலியுறுத்தல்

Posted On: 14 NOV 2021 5:38PM by PIB Chennai

பெண்களுக்கு சம சொத்துரிமை அளிக்க வேண்டும் எனவும், நாடு முன்னேற பெண்களுக்கு முழு அதிகாரம் அளிப்பதன் முக்கியத்துவத்தையும் குடியரசுத் துணைத் தலைவர் திரு எம்.வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

ஆந்திர மாநிலம் நெல்லூர் வெங்கடாச்சலம் பகுதியில் ஸ்வர்ண பாரத் அறக்கட்டளையின் 20ம் ஆண்டு கொண்டாட்டங்களில் குடியரசுத் துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியதாவது:

நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் பெண்கள். பல துறைகளில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் பங்குபெறுவதை ஊக்குவிக்க வேண்டும்.

பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளை தடுக்க வேண்டும். பல தொழில்களில் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.  நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

ஊரக பகுதிகளைச் சேர்ந்த பின்தங்கிய மக்களின் கனவுகளை நிறைவேற்ற, ஸ்வர்ண பாரத் அறக்கட்டளை பணியாற்றியுள்ளது திருப்தி அளிக்கிறது. இதில் பலர் வெற்றிகரமான தொழில் முனைவோர்களாக மாறியுள்ளனர்.  ஏழைகளை கல்வி மற்றும் தொழிற் கல்வி மூலமாக முன்னேற்ற வேண்டும். வேளாண்மை மீது அனைத்து தரப்பினரும் கவனம் செலுத்த வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள்தயக்கத்தை போக்கி தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு திரு. வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1771680

*****



(Release ID: 1771728) Visitor Counter : 293


Read this release in: English , Urdu , Hindi , Punjabi