ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இங்கிலாந்தின் வேல்ஸில் நமாமி கங்கே: கங்கை இணைப்பு கார்டிஃப்பில் தொடங்கப்பட்டது

Posted On: 13 NOV 2021 7:11PM by PIB Chennai

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற காப்-26-ல் வெற்றிகரமான அறிமுகத்திற்குப் பிறகு, கங்கா கனெக்ட் கண்காட்சி நவம்பர் 12, 2021 வெள்ளிக்கிழமை அன்று வேல்ஸில் உள்ள கார்டிஃப்பில் திறக்கப்பட்டது.

கார்டிஃப் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியை   வேல்ஸின் முதல் அமைச்சர் மாண்புமிகு மார்க் டிரேக்ஃபோர்ட் எம்.எஸ் மற்றும் இங்கிலாந்திற்கான இந்திய தூதர் மேன்மைமிகு காயத்ரி இஸ்ஸார் குமார் ஆகியோர் திறந்து வைத்தனர்.

தூய்மையான கங்கைக்கான தேசிய இயக்கம், சி-கங்கா மற்றும் இந்திய தூதரகம் ஆகியவற்றால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கங்கா கனெக்ட் ஒரு உலகளாவிய கண்காட்சி மற்றும் தகவல் தொடர்பு தளமாகும். நதி அமைப்பின் பல்வேறு அம்சங்களை வெளிப்படுத்தும் இந்தக் கண்காட்சி ஆர்வமுள்ள கூட்டாளர்களை ஒன்றிணைக்கும்.

கண்காட்சியின் முக்கிய நோக்கங்கள் வருமாறு:

* கங்கை நதி சுற்றுச்சூழல் அமைப்பின் அளவு மற்றும் சிக்கலான தன்மை பற்றிய தெளிவான மற்றும் ஆழமான புரிதலை வழங்குதல்

 

 

* உருவாக்கப்பட்டு வரும் மற்றும் செயல்படுத்தப்படும் தீர்வுகள் குறித்து கவனம் செலுத்துதல்

* திட்டத்தின் தற்போதைய நிலை மற்றும் காலக்கெடு குறித்த தகவல்களை பகிர்தல்

* நதியுடன் இந்தியர்கள் கொண்டிருக்கும் ஆழமான ஆன்மீக மற்றும் தத்துவ தொடர்பை விளக்குதல்

* நதி அமைப்பின் புத்துயிர், மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பில் ஈடுபட விரும்பும் ஆர்வமுள்ள தரப்பினர் மற்றும் புலம்பெயர்ந்தோருடன் தொடர்பை ஏற்படுத்துதல்

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1771504

****


(Release ID: 1771539) Visitor Counter : 156


Read this release in: English , Urdu , Hindi , Telugu