பாதுகாப்பு அமைச்சகம்
உத்தரப் பிரதேச பாதுகாப்புத் தொழில் வழித்தடத்தில் முதல் தனியார் உற்பத்தி வசதியை பாதுகாப்பு அமைச்சர் திறந்து வைத்தார், தமிழகம் குறித்து பேச்சு
Posted On:
13 NOV 2021 5:58PM by PIB Chennai
உத்தரப் பிரதேச பாதுகாப்புத் தொழில் வழித்தடத்தில் முதல் தனியார் உற்பத்தி வசதியை 2021 நவம்பர் 13 அன்று லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.
பிடிசி இண்டஸ்ட்ரீஸின் துணை நிறுவனமான ஏல்ராய் டெக்னாலஜிஸின் இந்த தயாரிப்பு வசதி, விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களின் எஞ்சின்கள், விமானங்கள், டிரோன்கள், நீர்மூழ்கி கப்பல்கள், இலகு துப்பாக்கிகள், விண்வெளி வாகனங்கள் உள்ளிட்டவற்றின் உதிரி பாகங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்யும்.
பிடிசி இண்டஸ்ட்ரீஸின் ஒருங்கிணைந்த உலோக உற்பத்தி வசதிக்கான அடிக்கல்லையும் பாதுகாப்பு அமைச்சர் நட்டு வைத்தார். டைட்டானியம் மற்றும் நிக்கெல் சூப்பர் அல்லாய் ஆகியவற்றுக்கு இறக்குமதிகளை நாடு சார்ந்திருப்பதை இது குறைக்கும்.
நிகழ்ச்சியில் பேசிய திரு ராஜ்நாத் சிங், இன்றைய போட்டித்தன்மை மிக்க சூழலில் வெற்றி பெறுவது எப்படி என்பதற்கான எடுத்துக்காட்டாக பிடிசி இண்டஸ்ட்ரீஸ் விளங்குவதாக கூறினார். உத்தரப் பிரதேச பாதுகாப்பு தொழில் வழித்தடமும் அதன் தயாரிப்பு நிலையங்களும் தற்சார்பு இந்தியாவுக்கான பிரதமர் திரு நரேந்திர மோடியின் லட்சியத்தின் விளைவு என்றார் அவர்.
உலகத்திற்காக இந்தியாவில் உற்பத்தி செய்தலுக்கான அரசின் உறுதியை வலியுறுத்திய திரு சிங், உள்நாட்டு நிறுவனங்களில் இருந்து அதிகளவில் கொள்முதல் செய்வதற்கான அரசின் முடிவு, ஏற்றுமதிகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள், உத்தரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் பாதுகாப்பு தொழில் வழித்தடங்களை அமைப்பதற்கான செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1771478
****
(Release ID: 1771495)
Visitor Counter : 198