சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

மக்களுக்கான டெலி-லா கைபேசிச் செயலியை திரு கிரண் ரிஜிஜு அறிமுகப்படுத்தினார்

Posted On: 13 NOV 2021 2:00PM by PIB Chennai

மக்களுக்கான டெலி-லா கைபேசிச் செயலியை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு அறிமுகப்படுத்தினார். டெலி-லா முன்கள செயல்பாட்டாளர்களையும் அவர் பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில் சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் பேராசிரியர் எஸ் பி சிங் பாகேல் கலந்து கொண்டார். இந்த நிகழ்வு 2021 நவம்பர் 8 முதல் 14 வரை நீதித்துறையால் கொண்டாடப்பட்ட விடுதலையின் அம்ரித் மஹோத்சவ கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகும்.

டிஜிட்டல் இந்தியா என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வை மூலம் புதிய இந்தியா உருவாகிறது என்று தமது செய்தியில் திரு கிரண் ரிஜிஜூ குறிப்பிட்டார். டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் டெலி லா உருவாக்கப்பட்டுள்ளது. இது வழக்கு விசாரணைக்கு முந்தைய செயல்முறையை வலுப்படுத்துவதற்கான தளமாகும்.

விடுதலையின் அம்ரித் மஹோத்சவ காலத்தில், பொது மக்கள் சுயசார்புடையவர்களாகவும், நீதியை எளிதில் அணுகக்கூடியவர்களாகவும் இருக்கும் வகையில் ஒன்றிணைய வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவின் 75 ஆண்டுகால சுதந்திர கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய 75,000 கிராமப் பஞ்சாயத்துகளில் டெலி-லாவை விரிவாக்கம் செய்வதாக அறிவித்தார்.

வழக்கறிஞர்கள் டெலி-லா இயக்கத்தில் சேரவும், சட்ட உதவி சேவைகளுக்கான அடிப்படை நடவடிக்கைகளாக சட்ட வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகளை வழங்கவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1771423 

***



(Release ID: 1771466) Visitor Counter : 322