உள்துறை அமைச்சகம்
திருப்பதியில் நவம்பர் 14 அன்று நடைபெறவுள்ள தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களை உள்ளடக்கிய தென் மண்டலக் குழுவின் 29-வது கூட்டத்திற்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா தலைமை வகிக்கிறார்
प्रविष्टि तिथि:
12 NOV 2021 8:16PM by PIB Chennai
திருப்பதியில் 2021 நவம்பர் 14 அன்று நடைபெறவுள்ள தென் மண்டலக் குழுவின் 29-வது கூட்டத்திற்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா தலைமை வகிக்கிறார்.
தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, தெலங்கானா ஆகிய மாநிலங்களையும் புதுச்சேரி, லட்சத்தீவுகள், அந்தமான் & நிகோபார் தீவுகள் ஆகிய யூனியன் பிரதேசங்களையும் உள்ளடக்கியது தென்மண்டலக் குழுவாகும்.
அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியை அடைய ஒத்துழைப்பு மற்றும் போட்டித்தன்மை மிக்க கூட்டாட்சி முறையை மேம்படுத்துவதற்கானத் தேவையை பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
இத்தகைய ஒத்துழைப்பை தொடர் பேச்சுவார்த்தை மற்றும் விவாதங்களுக்கான அமைப்பு ரீதியான செயல்முறையின் மூலமும் உருவாக்குவதற்கான தளத்தை மண்டல குழுக்கள் வழங்குகின்றன.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1771303
****
(रिलीज़ आईडी: 1771344)
आगंतुक पटल : 407