மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

24 மணி நேர வாடிக்கையாளர் சேவை மையத்தை இந்திய தேசிய இணையப் பரிமாற்ற அமைப்பு நிறுவியது

Posted On: 12 NOV 2021 3:46PM by PIB Chennai

வாரத்தின் அனைத்து நாட்களும் 24 மணி நேரமும் இயங்கும் வாடிக்கையாளர் சேவை மையத்தை இந்திய தேசிய இணையப் பரிமாற்ற அமைப்பு (நிக்சி) நிறுவியுள்ளது. இதன் மூலம், நிக்சியின் அனைத்து பிரிவுகளின் வாடிக்கையாளர்களுக்கும் சேவை வழங்கப்படும்.

இணையப் பரிமாற்றம், டாட் இன் பதிவகம் மற்றும் ஐஆர்ஐஎன்என்  ஆகிய மூன்று வணிகப்பிரிவுகளுடன் நிக்சி இயங்கி வருகிறது. வாடிக்கையாளர் சேவைகளை மேம்படுத்துவதற்காக இந்த முன்முயற்சியை நிக்சி எடுத்துள்ளது.

011-48202001 எனும் தொலைபேசி எண் மூலமாகவும் customercare@nixi.in   எனும் மின்னஞ்சல் முகவரி வாயிலாகவும் நிக்சி வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம்.

இது குறித்து நிக்சி தலைமை நிர்வாக அதிகாரி திரு அனில் குமார் ஜெயின் கூறுகையில், “இந்திய இணைய சமூகத்திற்கு சேவை செய்வதற்கான எங்கள் தொடர் முயற்சியில் மற்றுமொரு நடவடிக்கையாக வாடிக்கையாளர் சேவை பிரிவை உருவாக்கியுள்ளோம். இந்த முன்முயற்சியானது வாடிக்கையாளர் தொடர்புகளை தடையற்றதாகவும் மேலும் திறன் மிக்கதாகவும் மாற்றும்,” என்றார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspxPRID=1771185&RegID=3&LID=1 

-----



(Release ID: 1771215) Visitor Counter : 195


Read this release in: Marathi , English , Urdu , Hindi