வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
ஹிசாரில் உள்ள கல்லூரியில் மகாராணி லட்சுமி பாய் சிலையை திறந்து வைத்தார் திரு ஹர்தீப் சிங் பூரி
Posted On:
11 NOV 2021 5:44PM by PIB Chennai
ஹரியானா மாநிலம் ஹிசார் பகுதியில் உள்ள மகாராணி லட்சுமிபாய் பெண்கள் கல்லூரியில், ராணி லட்சுமி பாய் சிலையை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி இன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
21ம் நூற்றாண்டில், பெண்கள் மேம்பாடு மற்றும் பாலின சமத்துவம் குறித்து பல விவாதங்கள் நடக்கின்றன. ஆனால், இந்திய வரலாற்றில் பெண்களின் வீரம், தியாகம் மற்றும் சாதனைகள் நிறைந்த கதைகள் உள்ளன. இதில் ராணி லட்சுமி பாய்-ன் கதையும் ஒன்று. இந்த சிலை, இந்த கல்லூரி மாணவிகளை ஊக்குவிக்கும்.
ஆங்கில அடக்குமுறையை எதிர்த்தவர்களில் முக்கியமானவர் ராணி லட்சுமி பாய். அவரது வாழ்க்கை மற்றும் தேசியவாதம் இந்திய பெண்களை பல தலைமுறைகளாக ஊக்குவிக்கின்றன. ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான சுதந்திர போராட்டத்துக்கு அவர் தலைமை தாங்கினார். திரைப்படங்களிலும், கதைகளிலும் ராணி லட்சுமி பாய் புரட்சிகர சுதந்திர போராட்டக்காரராக மட்டுமே காட்டப்படுகிறார். அவர் ஆங்கில மொழியில் புலமை பெற்றிருந்தவர்களுக்கு சமமான அறிவாளியாகவும் இருந்தார் என்பது சிலருக்கு மட்டுமே தெரியும்.
இவ்வாறு திரு ஹர்தீப் சிங் பூரி பேசினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1770995
***
(Release ID: 1771025)
Visitor Counter : 177