பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

துபாய் விமான கண்காட்சி 2021-ல் இந்திய விமானப்படை பங்கேற்பு

Posted On: 10 NOV 2021 5:20PM by PIB Chennai

துபாயில் இரண்டாண்டுக்கு ஒரு முறை நடைபெறும் விமான கண்காட்சியில், இந்திய விமானப்படை விமானங்கள் பங்கேற்கின்றன.

துபாய் விமான கண்காட்சி, அல் மக்தோம் சர்வதேச விமான நிலையத்தில் நவம்பர் 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை‌ நடைபெறுகிறது. இதில் பங்கேற்க இந்திய விமானப்படைக்கு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு அழைப்பு விடுத்தது. இதையடுத்து இதில் இந்திய விமானப்படையின் சூர்யகிரண் மற்றும் சாரங் சாகச குழுவினர் பங்கேற்கின்றனர். சவுதி, ரஷ்யா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சாகச குழுவினருடன், இந்திய விமானப்படையும் சாகச நிகழச்சிகளில் பங்கேற்கிறது.  அதோடு இந்திய விமானப்படையின் உள்நாட்டு இலகு ரக போர் விமானம் தேஜஸ் இந்த சாகச குழுவில் இணைந்துள்ளது.

இந்திய விமானப்படையின் சாரங்கு குழுவின், துருவ் ரக நவீன இலகு ரக ஹெலிகாப்டர்கள், சூர்ய கிரண் குழுவில் இடம் பெற்றுள்ள 10 பிஏஇ ஹாக் விமானங்கள் துபாய் சென்றுள்ளன. இவற்றை கொண்டு செல்ல விமானப்படையின் ஜம்போ சரக்கு விமானம் சி-17 குளோப் மாஸ்டர் மற்றும் சி-180ஜே சூப்பர் ஹெர்குலஸ் ரக விமானங்கள் உதவின. துபாய் வந்த இந்திய விமானப்படை குழுவினரை, ஐக்கிய அரபு எமிரேஸ்ட் விமானப்படை உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1770593

 

****(Release ID: 1770730) Visitor Counter : 139


Read this release in: English , Urdu , Hindi , Marathi