தேர்தல் ஆணையம்
ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா சட்ட மேலவையில் உள்ள காலி இடங்களுக்கு தேர்தல் அறிவிப்பு
Posted On:
09 NOV 2021 1:32PM by PIB Chennai
ஆந்திரப் பிரதேச சட்ட மேலவையில் நிரப்பப்பட வேண்டிய 8 உள்ளாட்சி பிரதிநிதிகளின் தொகுதிகளுக்கும், தெலங்கானா சட்ட மேலவையில் 12 உள்ளாட்சி பிரதிநிதிகளின் தொகுதிகளுக்கும், கர்நாடகா சட்ட மேலவையில் 20 உள்ளாட்சி பிரதிநிதிகளின் தொகுதிகளுக்கும், மகாராஷ்டிரா சட்ட மேலவையில் 5 உள்ளாட்சி பிரதிநிதிகளின் தொகுதிகளுக்குமான தேர்தல் குறித்த அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இம்மாநிலங்களின் சட்ட மேலவை காலியிடங்களுக்கான தேர்தல் அறிவிப்பு 2021 நவம்பர் 16 அன்று வெளியிடப்படும். வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் 2021 நவம்பர் 23.
வேட்பு மனுக்களின் பரிசீலனை 2021 நவம்பர் 24 அன்று நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் 2021 நவம்பர் 26.
2021 டிசம்பர் 10 அன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறும். பதிவான வாக்குகள் 2021 டிசம்பர் 14 அன்று எண்ணப்படும். 2021 டிசம்பர் 16-க்குள் தேர்தல் நடைமுறைகள் நிறைவடைய வேண்டும்.
தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. கொவிட்-19 விரிவான விதிமுறைகளை பின்பற்றி தேர்தல் நடத்தப்படும்.
மேலும் விவரங்களுக்கு, கீழ்காணும் ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1770254
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1770249
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1770252
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1770244
------
(Release ID: 1770356)
Visitor Counter : 203