பாதுகாப்பு அமைச்சகம்

விடுதலையின் அம்ரித் மகோத்சவ நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக எல்லையோர சாலைகள் அமைப்பின் சார்பில் இருசக்கர வாகன பயணம் இரண்டாம் கட்டத்தை நிறைவு செய்துள்ளது

Posted On: 05 NOV 2021 6:41PM by PIB Chennai

இந்தியாவின் 75-ம் ஆண்டு சுதந்திரத்தை குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட எல்லையோர சாலைகள் அமைப்பின் விடுதலையின் அம்ரித் மகோத்சவ இருசக்கர வாகன பயணம் 2021 நவம்பர் 4 அன்று சிலிகுரியில் இரண்டாம் கட்டத்தை நிறைவு செய்துள்ளது.

எல்லையோர சாலைகள் அமைப்பு மற்றும் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 20 பேர் கொண்ட குழு 2021 அக்டோபர் 24 முதல் ஜம்மு & காஷ்மீர், பஞ்சாப், உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் அஸ்ஸாம் வழியாக 11 நாட்களில் சுமார் 3,000 கிமீ பயணத்தைத் கடந்தது.

முதல் கட்டமாக லே & லடாக், ஜம்மு & காஷ்மீர் மற்றும் இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட சவாலான மலை மற்றும் பனியால் சூழப்பட்ட பகுதிகள் வழியாக பயணம் நடைபெற்றது. ஸ்ரீநகர், ரம்பன், ஜம்மு & ரிஷிகேஷ் ஆகிய இடங்களைத் தொடும் மலைப்பாங்கான சாலைகள் வழியாக இரண்டாம் கட்ட பயணம் தொடர்ந்தது.

பயணத்தின் இரண்டாம் பாதியில், வட-மத்திய மற்றும் மத்திய கங்கை சமவெளிகள் வழியாக .பி மற்றும் பீகாரில் உள்ள ரிஷிகேஷ், பிரயாக்ராஜ், புத்தகயா மற்றும் வாரணாசி ஆகிய ஆன்மிக நகரங்கள் வழியாக குழு பயணம் செய்தது.

ஸ்ரீநகர், ரிஷிகேஷ் ஆகிய நகரங்களில் உள்ள பல்வேறு இடங்களில் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 800-க்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்தனர். உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நோய்கள், தனிப்பட்ட மற்றும் சமூக சுகாதாரத்தை பராமரித்தல், கொவிட்-19 குறித்து முகாம்களில் பங்கேற்றவர்களுக்கு மருத்துவ வல்லுனர்கள் அறிவுரைகள் வழங்கினர்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1769563

----(Release ID: 1769586) Visitor Counter : 216


Read this release in: English , Urdu , Hindi