நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
கடந்த வருடத்தை விட இந்த வருடம் வெங்காய விலைகள் குறைவு மத்திய அரசின் முயற்சிகள் பலனளிக்கின்றன
Posted On:
03 NOV 2021 6:40PM by PIB Chennai
கடந்த வருடத்தை விட இந்த வருடம் வெங்காய விலைகள் குறைந்துள்ளன. வெங்காயத்தின் அனைத்திந்திய சில்லறை மற்றும் மொத்த விலை முறையே ஒரு கிலோவிற்கு ரூபாய் 40.13 ஆகவும் ஒரு குவிண்டாலுக்கு ரூபாய் 3215.92 ஆகவும் உள்ளது.
தேவைக்கேற்ப வெங்காயங்கள் சேமிக்கப்படுவதன் காரணமாக விலைகள் நிலைப்பெற்றுள்ளன.
விலைகளை கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு எடுத்து வரும் முயற்சிகள் பலனளிப்பதை இது காட்டுகிறது.
மழை மற்றும் விநியோக சங்கிலியில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக 2021 அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் இருந்து வெங்காய விலைகள் ஏற்றம் கண்டன. விலைகளை குறைப்பதற்காக நுகர்வோர் விவகாரங்கள் துறை நடவடிக்கைகளை எடுத்தது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்
httpspib.gov.inPressReleasePage.aspxPRID=1769258
******
(Release ID: 1769297)
Visitor Counter : 195