ஆயுஷ்
azadi ka amrit mahotsav

ஜெய்ப்பூரில் உள்ள தேசிய ஆயுர்வேத கல்விக்கழகம், தேசிய ஆயுர்வேத தினம் 2021-ஐக் கொண்டாடியது

Posted On: 02 NOV 2021 3:25PM by PIB Chennai

ஜெய்ப்பூரில் உள்ள தேசிய ஆயுர்வேத கல்விக்கழகம், தேசிய ஆயுர்வேத தினம் 2021-ஐக் கொண்டாடியது. 2 நாள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் நிறைவு நாளில், மத்திய ஆயுஷ் அமைச்சர் திரு. சர்பானந்த சோனோவால் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். அவர் உரையாற்றுகையில், தேசிய ஆயுர்வேத கல்விக்கழகத்தின் இமாச்சலப்பிரதேசம் பஞ்ச்குலாவில் உள்ள துணை மையத்தில்  அடிப்படைக் கட்டமைப்பை விரிவுபடுத்த ரூ.260 கோடி விடுவிக்கப்பட்டிருப்பதாக அறிவித்தார்.

உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நோயற்ற சுகாதாரமான நீண்ட ஆயுளுக்கு வழிவகுக்கும் ஆயுர்வேதத்தின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென்று அவர் கூறினார்.

கொரோனா பெருந்தொற்று காலம் சுகாதாரமான வாழ்க்கைக்கு நல்வாழ்வு மற்றும் நோய் தடுப்பில் முக்கியக் கவனம் செலுத்த செய்தது என்று மத்திய ஆயுஷ் மற்றும் மகளிர், குழந்தைகள் நலத்துறை இணையமைச்சர் டாக்டர் முன்ச்பாரா மகேந்திரபாய் கலுபாய் தெரிவித்தார். ஆயுர்வேதத்தில் உள்ள ஏராளமான பயன்கள் குறித்து உலகத்திற்கு தெரிவிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும், இன்றைய காலத்தில் வளர்ச்சியடைந்த நாடுகளும் கூட சிகிச்சை மற்றும் குணப்படுத்தலுக்கு ஆயுர்வேதத்தை எதிர்பார்க்கின்றன என்றும் அவர் கூறினார்.

இந்தாண்டுக்கான தேசிய ஆயுர்வேத தினத்தின் மையப்பொருள் “ஊட்டச்சத்துக்கான ஆயுர்வேதம்” என்பதாகும்.

****


(Release ID: 1768966)
Read this release in: English , Urdu , Hindi