நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தமிழ்நாட்டில் வருமானவரித்துறை சோதனைகளை நடத்தியுள்ளது

Posted On: 02 NOV 2021 1:19PM by PIB Chennai

தமிழ்நாட்டில் கால்நடைத் தீவனங்கள் உற்பத்தி நிறுவனம், கோழிப்பண்ணை, சமையல் எண்ணெய், முட்டை பொருட்கள் ஏற்றுமதி ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள குழுமம் ஒன்றில் வருமானவரித்துறையினர் சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். தமிழ்நாடு,  கர்நாடகா, கேரளா ஆகியவற்றில் உள்ள 40 இடங்களில் 27.10.2021 அன்று இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சோதனையின் போது கணக்கில் வராத ரூ. 3.3 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.300 கோடிக்கும் அதிகமாக கணக்கில் காட்டப்படாத வருவாயும் கண்டறியப்பட்டது.

 

****


(Release ID: 1768916)
Read this release in: English , Urdu , Hindi