மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021-ன் இரண்டாம் பகுதி குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மற்றும் அவற்றுக்கான பதில்களை மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சகம் வெளியிட்டுள்ளது

Posted On: 01 NOV 2021 6:20PM by PIB Chennai

தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021-ன் இரண்டாம் பகுதி குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மற்றும் அவற்றுக்கான பதில்களை மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் இன்று வெளியிட்டார்.

மக்களின் வாழ்க்கை முறையை மாற்றியமைத்தல், டிஜிட்டல் பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதன் மூலம் பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் விரிவுபடுத்துதல் மற்றும் முக்கிய துறைகளில் திறன்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட முதன்மையான மூன்று நோக்கங்களுக்காக தொழில்நுட்பத்தின் ஆற்றலைப் பயன்படுத்தும் உலகின் முன்னணி நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று திரு ராஜீவ் சந்திரசேகர் கூறினார்.

நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் எண்ணிக்கை அதிகரித்து வரும் பயனர்களுக்கு வெளிப்படையான, பாதுகாப்பான, நம்பகமான மற்றும் பொறுப்பான இணையத்தை வழங்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்று திரு ராஜீவ் சந்திரசேகர் கூறினார்.

28 கேள்விகளைக் கொண்ட இந்த தொகுப்பு, தகவல் தொழில்நுட்ப விதிகள் குறித்த பொதுவான கேள்விகளுக்கு எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் பதிலளிக்க முயற்சிக்கிறது.

இந்த தொகுப்பு நான்கு பிரிவுகளை கொண்டுள்ளது, அவை பின்வருமாறு:

பிரிவு I: அடிப்படை தகவல்

பிரிவு II: அடிப்படை சொற்பிரயோகம் மற்றும் விதிகளின் நோக்கம்

பிரிவு III:  இடைநிலை அமைப்பின் மூலம் விரிவான ஆய்வு

பிரிவு IV:  குறிப்பிடத்தக்க சமூக ஊடக இடைநிலையாளர்களால் கூடுதல் ஆய்வு

பிரிவு V:  இடைநிலை விதிகளுக்கு இணங்காதவை

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1768601

****


(Release ID: 1768662)
Read this release in: English , Urdu , Hindi , Malayalam