மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
டேராடூனில் உத்தராகண்டின் முதல் இணையதள நிலையம்: மத்திய அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் தொடங்கி வைத்தார்
Posted On:
01 NOV 2021 3:32PM by PIB Chennai
டேராடூனில் உத்தராகண்டின் முதல் இணையதள நிலையத்தை
மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர், புதுதில்லியிலிருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்திய தேசிய இணையதள நிலையத்தின்(நிக்சி) 10-வது நிலையம் உத்தராகண்டில் இணையதளம் மற்றும் பிராட்பேண்ட் சேவைகளை மேம்படுத்த உதவும். இந்நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திர சேகர் பேசியதாவது
டிஜிட்டல் பொருளாதாரத்தை அதிகரித்து சில முக்கிய தொழில்நுட்பத் துறைகளில் திறனைக் கொண்டு வருவது, ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்வது, தொழில்முனைவை ஊக்குவிப்பது, வேலை வாய்ப்பை உருவாக்குவது மற்றும் போட்டியை மேம்படுத்தும் நோக்கில், கடந்த 2015ஆம் ஆண்டு டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். கடந்த 18 மாதங்களாக 21-ஆம் நூற்றாண்டின் மிக மோசமான பெருந்தொற்றால் உலக நாடுகள் இன்னல்களை அனுபவித்தன. இதனால் நமது அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. நமது பொருளாதாரத்தில் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் நாம் முன்பு செய்த முதலீடு காரணமாக நமது பொருளாதாரம் வேகமாக பழைய நிலையை அடைந்தது.
உத்தராகண்டில் அடுத்த இணையதள நிலையம் நைனிடால் மாவட்டத்தில் ஏற்படுத்தப்படும். அனைத்து இந்திய மக்களுக்கும் இணையதள தொழில்நுட்பத்தைக் கொண்டு செல்ல இந்திய தேசிய இணையதள நிலையம் பாடுபடுகிறது.
மேலும் விவரங்களுக்கு https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1768488
------
(Release ID: 1768622)
Visitor Counter : 254