ஜல்சக்தி அமைச்சகம்

தேசிய ஜல் ஜீவன் இயக்க குழு கர்நாடகா பயணம்

Posted On: 29 OCT 2021 2:55PM by PIB Chennai

தேசிய ஜல் ஜீவன் இயக்கத்தின் ஆறு பேர் கொண்ட குழு கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு, தும்கூர் மற்றும் கோலார் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு 2021 அக்டோபர் 27 முதல் 30 வரை பயணம் மேற்கொண்டுள்ளது.

தினமும் 3-5 கிராமங்களுக்கு செல்லும் இக்குழு, திட்டம் செயல்படுத்தப்படுவதை கள அளவில் ஆய்வு செய்து, 2024-ம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளிலும் குடி நீர் இணைப்புகள் எனும் இலக்கை அடைவதை உறுதி செய்வதற்காக ஜல் ஜீவன் இயக்கத்தை விரைவாக செயல்படுத்த உள்ளூர் அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்.

இந்த பயணத்தின் போது, மாவட்ட அதிகாரிகள், உள்ளூர் சமூகம், கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் மற்றும் பணிக்குழு ஆகியோருடன் ஜல் ஜீவன் குழு கலந்துரையாடும். அதன்பிறகு, தங்கள் கருத்துகளை மாவட்ட அதிகாரிகள் மற்றும் மாநில அரசின் மூத்த அதிகாரிகளுடன் குழுவினர் பகிர்ந்து கொள்வார்கள்.

அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் 100 சதவீதம் குழாய் நீர் விநியோகத்தை உறுதி செய்வதற்கான இலக்கை எட்டுவதில் மாநிலத்தின் தயார்நிலை, திட்டத்தை செயல்படுத்துதல் மற்றும் முன்னேற்றத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

மகாராஷ்டிராவில், மொத்தமுள்ள 97.92 லட்சம் கிராமப்புற குடும்பங்களில், 39.40 லட்சம் (39.87 சதவீதம்) குடும்பங்களுக்கு குழாய் நீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 15, 2019 அன்று, ஜல் ஜீவன் இயக்கம் தொடங்கப்பட்ட நேரத்தில், 24.51 லட்சம் (25.03 சதவீதம்) வீடுகளுக்கு மட்டுமே குழாய் நீர் விநியோகம் இருந்தது.

இம்மாநிலத்தில் 26 மாதங்களில் 14.53 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 2021-22 ஆம் ஆண்டில், 25.17 லட்சம் வீடுகளுக்கு குழாய் நீர் இணைப்புகளை வழங்க மாநிலம் திட்டமிட்டுள்ளது.

ஒவ்வொரு கிராமப்புற வீடுகளுக்கும் குழாய் நீர் வழங்கும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் லட்சியத்தை அடைவதற்காக, 2021-22-ம் ஆண்டில் மகாராஷ்டிராவிற்கு ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் மானியத் தொகையை ரூ 5,008.80 கோடியாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. 2020-21-ல் இது ரூ 1,1189.40 கோடியாக இருந்தது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1767489

****



(Release ID: 1767716) Visitor Counter : 144


Read this release in: English , Hindi , Kannada