ஜல்சக்தி அமைச்சகம்
தூய்மையான கங்கைக்கான தேசிய இயக்கத்தின் 38-வது செயற்குழு கூட்டம்
Posted On:
29 OCT 2021 1:33PM by PIB Chennai
தூய்மையான கங்கைக்கான தேசிய இயக்கத்தின் 38-வது செயற்குழு கூட்டம் அதன் தலைமை இயக்குநர் திரு ராஜீவ் ரஞ்சன் மிஸ்ரா தலைமையில் நடைபெற்றது. மேற்கு வங்கம், உத்தரகாண்ட் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் சில முக்கிய திட்டங்களுக்கு கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.
மேற்கு வங்கத்தில் உள்ள வடக்கு பாரக்பூர் நகராட்சியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கை கூட்டத்தின் போது மதிப்பீடு செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி, நகரத்தில் மையப்படுத்தப்பட்ட கழிவுநீர் அமைப்பு இல்லை என்பதால், கழிவுநீர் கங்கை நதியில் பாய்கிறது. திட்டத்திற்கான மதிப்பீடு ரூ 215 கோடி ஆகும்.
பீகாரில் உள்ள டெஹ்ரி-ஆன்-சோனில் மூன்று புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட திட்டங்களுக்கும் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டன. இவற்றிலொன்று சிவபெருமான் கோவிலுக்கு அருகிலும், மற்றொன்று டால்மியா நகரிலும், இன்னொன்று இஸ்லாம் கன்ஜ் அருகிலும் அமையவுள்ளன. திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ 63.89 கோடி ஆகும்.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள அஜீத்பூர் கிராமத்தில் மாதா பால்குமாரி குளியலறை கட்டிடம் மற்றும் தகனம் செய்யுமிடம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களும் கூட்டத்தில் முன்மொழியப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1767458
*****
(Release ID: 1767661)
Visitor Counter : 177