ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

‘விரைவு சக்தி எக்ஸ்பிரஸ்’, நாட்டின் முதல் 3ம் வகுப்பு ஏ.சி பெட்டியுடன் கூடிய சிறப்பு ரயில்: தேசிய தலைநகர் (ஆனந்த் விகார் டெர்மினல்) - பாட்னா இடையே இயக்கம்

Posted On: 29 OCT 2021 4:18PM by PIB Chennai

பண்டிகை காலத்தில் மக்களின் வசதிக்காக, ஆனந்த் விகார் டெர்மினல்  - பாட்னா - ஆனந்த் விகார் டெர்மினல் வழித்தடத்தில் 20, மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகளுடன் கூடிய விரைவு சக்தி சிறப்பு ரயிலை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.

ஆனந்த் விகாரிலிருந்து இன்று  அக்டோபர்  29, 31, நவம்பர் 2,5,7 ஆகிய தேதிகளில்  இரவு 11.10 மணிக்கு புறப்படும் விரைவு சக்தி சிறப்பு ரயில் (எண். 01684)  மறுநாள் 3.45 மணிக்கு பாட்னா சென்றடையும்.  

மறுமார்க்கத்தில்  பாட்னாவில் இருந்து  அக்டோபர் 30, நவம்பர் 1, 3, 6, 8, ஆகிய தேதிகளில் மாலை 5.45மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 9.50 மணிக்கு ஆனந்த் விகார் டெர்மினல் வந்தடையும்.

இந்த ரயில்  கான்பூர் சென்ட்ரல், பிரயாக்ராஜ், வாரணாசி, பண்டிட் தீன தயாள் உபாத்யாய் மற்றும் தனாபூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

***


(Release ID: 1767649) Visitor Counter : 197
Read this release in: English , Urdu , Hindi , Punjabi , Odia