சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட்-19 அண்மைத் தகவல்
Posted On:
28 OCT 2021 9:26AM by PIB Chennai
தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இந்தியா இதுவரை 104.04 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தியுள்ளது. .
கடந்த 24 மணி நேரத்தில் 16,156 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.
குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.20 சதவீதம்; 2020 மார்ச் மாதத்திற்குப்பின் இதுவே அதிகமான அளவு.
கடந்த 24 மணி நேரத்தில் 17,095 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,36,14,434 என அதிகரித்துள்ளது.
கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம் மொத்த பாதிப்பில் 1 சதவீதத்துக்கும் கீழ் குறைந்து தற்போது 0.47 சதவீதமாக உள்ளது. 2020 மார்ச் மாதத்திற்குப் பின், இது மிகக் குறைந்த அளவு.
இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,60,989; இது 243 நாட்களில் மிகவும் குறைந்த அளவு.
வாராந்திர பாதிப்பு விகிதம் (1.19 சதவீதம்) கடந்த 34 நாட்களாக 2 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.
தினசரி பாதிப்பு விகிதம் (1.25 சதவீதம்) கடந்த 24 நாட்களில் 2 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.
இதுவரை மொத்தம் 60.44 கோடி கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1767074
*******
(Release ID: 1767145)
Visitor Counter : 210