சுரங்கங்கள் அமைச்சகம்
விடுதலையின் அம்ரித் மகோத்ஸவ கொண்டாட்டம்: புகைப்பட கண்காட்சியை நடத்தியது இந்துஸ்தான் காப்பர் (தாமிர) நிறுவனம்
प्रविष्टि तिथि:
27 OCT 2021 6:09PM by PIB Chennai
விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தின் ஒரு பகுதியாக, ராஜஸ்தானில் உள்ள கேத்ரி தாமிர வளாகம், மத்தியப் பிரதேசத்தில் உள்ள மலன்ஜ்காண்ட் தாமிர சுரங்கம், ஜார்கண்ட்டில் உள்ள இந்திய தாமிர வளாகம், மகாராஷ்டிராவில் உள்ள தலோஜா தாமிர சுரங்கம் ஆகிய இடங்களில் புகைப்பட கண்காட்சியை இந்துஸ்தான் தாமிர நிறுவனம் நடத்தியது. நாட்டின் வளமான தாமிர பாரம்பரியம், தாமிர உற்பத்தியில் எச்சிஎல் நிறுவனத்தின் பங்கு, நாட்டின் சுதந்திர போராட்டம் போன்ற பல தலைப்புகளில், இந்த கண்காட்சியில் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.
எச்சிஎல்எல் நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இந்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டனர். இந்த கண்காட்சி தேசபக்தி உணர்வை தூண்டியது மற்றும் சுதந்திர போராட்டத்தின் அரிய புகைப்படங்களை காட்சிக்கு வைக்கும் வாய்ப்பை வழங்கியது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1766994
***
(रिलीज़ आईडी: 1767018)
आगंतुक पटल : 337