குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

60 புதிய டிசைன்களுடன் பிரபலமடையபோகிறது காதி: வளரும் ஆடை வடிவமைப்பாளர்களுக்கு விருது வழங்கிய காதி கிராம தொழில் ஆணையம்

Posted On: 27 OCT 2021 3:31PM by PIB Chennai

காதியின் ஆடை அலங்கார வடிவமைப்பு போட்டி, புதுதில்லியில் உள்ள அசோக் ஓட்டலில் நேற்று மாலை நடத்தப்பட்டது.

இந்த ஆடை அலங்கார வடிவமைப்பு போட்டியை, இந்திய ஆடை அலங்கார வடிவமைப்பு கவுன்சில் நடத்தியது. இதில் 10 வளரும் ஆடை வடிவமைப்பாளர்கள் தங்களின் 60 புதிய டிசைன்களை  வெளிக்காட்டினர். இவர்கள் அகில இந்திய காதி வடிவமைப்பாளர் போட்டி மூலம் தேர்வு செய்யப்பட்டனர். முதல் 3 இடங்களைப் பிடித்த ஆடை வடிவமைப்பாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

ஆடை வடிவமைப்பாளர் ஸ்வாதி கபூர்ரூ.10 லட்சம் பரிசு தொகையுடன் முதல் பரிசை வென்றார். துருவ் சிங் என்பவர் ரூ.5 லட்சம் பரிசுத் தொகையுடன் 2வது பரிசை வென்றார். கவுசல் சிங் மற்றும் கவுரவ் சிங் என்ற இரண்டு ஆடை வடிவமைப்பாளர்கள் ரூ.2 லட்சம் பரிசுத் தொகையுடன் 3வது பரிசை வென்றனர்.

இவர்கள் உருவாக்கிய புதிய டிசைன் காதி உடைகள், நாடு முழுவதும் உள்ள காதி விற்பனை நிலையங்களில், விரைவில் விற்பனைக்கு வரவுள்ளன என்று காதி கிராம தொழில் ஆணைய தலைவர் திரு வினய் குமார் சக்சேனா தெரிவித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1766899


(Release ID: 1766995) Visitor Counter : 287


Read this release in: Telugu , English , Hindi , Bengali