ஜல்சக்தி அமைச்சகம்

ஒரு நாளைக்கு 10 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட அதிநவீன கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலையை வாரணாசியில் பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைத்தார்

Posted On: 26 OCT 2021 7:09PM by PIB Chennai

ஒரு நாளைக்கு 10 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட அதிநவீன கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலையை உத்தரப் பிரதேசத்தில் உள்ள  வாரணாசியில் 2021 அக்டோபர் 25 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைத்தார். எட்டு புனித குளங்களையும் வாரணாசியில் பிரதமர் திறந்து வைத்தார்.

இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைக்கான அடிக்கல் 2018 நவம்பர் 12 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடியால் நடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதை கட்டி முடிக்க ரூபாய் 72.91 கோடி செலவானது.

இந்த ஆலை கட்டி முடித்து திறந்து வைக்கப்பட்டுள்ளதன் காரணமாக, வாரணாசியில் உள்ள ஐந்து கால்வாய்களில் இருந்து கங்கையில் கலக்கும் அசுத்த நீர் முழுவதும் தடுத்து நிறுத்தப்படும்.

ரூபாய் 18.96 கோடி செலவில் புனரமைக்கப்பட்டுள்ள எட்டு புனித குளங்களையும் பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைத்தார். தூய்மையான கங்கைக்கான தேசிய இயக்கத்தின் கீழ், தூய்மை கங்கை நிதியின் வாயிலாக இந்த பணிகள் செய்து முடிக்கப்பட்டன.

 

கங்கையாற்றின் பாதுகாப்பு மற்றும் புனரமைப்புக்காக அனைத்து முனைகளிலும் அரசு பணியாற்றி வருகிறது. கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகள் அதிக அளவில் நிறுவப்படுவதை  தூய்மையான கங்கைக்கான தேசிய இயக்கம் உறுதி செய்கிறது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1766720



(Release ID: 1766759) Visitor Counter : 234


Read this release in: Urdu , English , Hindi , Telugu