அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

தன்னிச்சையாக ஒளியை வெளியிடும் நானோ பொருட்களின் அடிப்படையிலான பாதுகாப்பு மை கள்ளநோட்டுகளை கட்டுப்படுத்தும்

Posted On: 26 OCT 2021 3:21PM by PIB Chennai

பிராண்டட் பொருட்கள், வங்கி நோட்டுகள், மருந்துகள், சான்றிதழ்கள் ஆகியவற்றின் போலிகள் மற்றும் கள்ள நோட்டுகளை எதிர்த்து போராடுவதற்கான தனித்துவமான ரசாயனப் பண்புகளை கொண்ட தன்னிச்சையாக ஒளிரும் நானோ பொருட்களின் அடிப்படையிலான நச்சுத்தன்மையற்ற பாதுகாப்பு மையை இந்திய விஞ்ஞானி ஒருவர் உருவாக்கியுள்ளார்.

 

போலி பொருட்கள் மற்றும் கள்ள நோட்டுகள் தீவிர பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில், அவற்றை கண்டுபிடிக்க உதவும் பொருட்கள் குறைந்த நிலைத்தன்மை கொண்டதாகவும், அதிக நச்சுத்தன்மை மிக்கதாகவும் உள்ள நிலையில், இந்த மை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

 

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி பெற்ற நிறுவனமான மொஹாலியில் உள்ள நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் சன்யாசிநாயுடு பொட்டுவின் ஆராய்ச்சிக் குழு, நச்சுத்தன்மையற்ற உலோக பாஸ்பேட் அடிப்படையிலான மையை உருவாக்கியுள்ளது.

 

வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் ஒளி போன்ற நடைமுறை நிலைமைகளின் கீழ் மிகவும் நிலையானதாக இருக்கும் ஒளிரும் பண்புகளை இது கொண்டிருக்கும். இந்த கண்டுபிடிப்பு குறித்து 'கிரிஸ்டல் குரோத் அண்ட் டிசைன்' மற்றும் 'மெட்டீரியல்ஸ் டுடே கம்யூனிகேஷன்ஸ்' இதழ்களில் வெளியிடப்பட்டுள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு, டாக்டர் சன்யாசிநாயுடு பொட்டுவை (பி.எஸ். நாயுடு), விஞ்ஞானி-சி (sanyasinaidu@inst.ac.in) என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.


மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1766593

***



(Release ID: 1766751) Visitor Counter : 188


Read this release in: English , Urdu , Hindi , Bengali