நிதி அமைச்சகம்

பஞ்சாபில் வருமான வரித்துறை சோதனை

Posted On: 26 OCT 2021 4:02PM by PIB Chennai

பஞ்சாபில் இரு குழுமங்களுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் காட்டப்படாதப் பணம்  மற்றும் வருவாய் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. 

பஞ்சாபில் சைக்கிள் விற்பனை செய்யும் ஒரு குழுமத்துக்குச் சொந்தமான இடங்களில் கடந்த 21-ம்தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்தக் குழுமம் ஆண்டுக்கு ரூ.90 கோடியை வருவாயை மறைத்துள்ளது. தங்கள் விற்பனையின் பெரும்பகுதியை ரொக்கமாக மேற்கொண்டுள்ளது.   இந்தச் சோதனையில் கணக்கில் காட்டப்படாத வருவாய் ரூ.150 கோடி கண்டுபிடிக்கப்பட்டது.  கணக்கில் காட்டப்படாத ரொக்கப்பணம் ரூ.2.25 கோடியும், ரூ.2 கோடி மதிப்பிலான தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.

ஜலந்தரில் உள்ள மற்றொரு குழுமம் குடியுரிமை மற்றும் மாணவர்களுக்கு கல்வி விசா வழங்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளது. ஒரு மாணவருக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை கட்டணம் வசூலித்துள்ளனர். கடந்த ஐந்தாண்டுகளில் இந்தக் குழுமம்  ரூ.200 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளது. ஆனால் வெளிநாட்டுப் பல்கலைக்கழங்களிலிருந்து கமிஷனாக பெற்ற தொகையை மட்டுமே வருவாய் வரித்துறையிடம் கணக்கு காட்டியுள்ளது. இங்கு சுமார் 40 கோடி மதிப்பில் கணக்கில் காட்டப்படாத வருவாய் கண்டறியப்பட்டுள்ளது. ரூ.20 லட்சம் ரொக்கப்பணமும், ரூ.33 லட்சம் மதிப்பிலான நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெறுகிறது

-------



(Release ID: 1766718) Visitor Counter : 173


Read this release in: English , Urdu , Hindi , Telugu