வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விதிமுறைகள் அடிப்படையிலான பலதரப்பு வர்த்தக முறைக்குள் தடையற்ற வர்த்தகம் தேவை திரு பியூஷ் கோயல் வலியுறுத்தல்

Posted On: 22 OCT 2021 4:58PM by PIB Chennai

விதிமுறைகள் அடிப்படையிலான பலதரப்பு வர்த்தக முறைக்குள் தடையற்ற வர்த்தக முறை தேவையென  மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் வலியுறுத்தியுள்ளார்.

புதிதில்லியில் உள்ள  வெளிநாட்டு  வர்த்தக இந்திய கழகத்தின் (IIFT) 54வது பட்டமளிப்பு விழாவில் திரு பியூஷ் கோயல் கலந்து கொண்டு பேசியதாவது:

விதிமுறைகள் அடிப்படையிலான பலதரப்பு வர்த்தக முறைக்குள் தடையற்ற வர்த்தக முறை, நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும். எங்கெல்லாம் இந்தியா நியாயமற்ற நடவடிக்கைகளை சந்திக்கிறதோ அதற்கு பதில் நடவடிக்கையில் இந்தியா ஈடுபடும். சர்வதேச வர்த்தகத்தில் கட்டணமில்லாத் தடைகளால் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படப் வேண்டும். 130 கோடி இந்தியர்களின் ஒட்டுமொத்த முயற்சியால் 100 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டச் சாதனையை இந்தியா சமீபத்தில் படைத்துள்ளது. தற்சார்பு இந்தியாவிற்கு இதுதான் சான்று. பட்டமளிப்பு விழா ஒரு முக்கியமான நிகழ்வு இது பட்டதாரிகளின் பயணத்தின் அடுத்த நடவடிக்கையைக் குறிக்கிறது.   அறிவைப் பெறுவதிலிருந்து, அறிவைப் பயன்படுத்துவதை நோக்கி பட்டதாரிகள் செல்கின்றனர்.  ஐஐஎஃப்டி கடந்த 1963-ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது முதல்  இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகத்தில் மிகப் பெரிய பங்களிப்பை அளித்து வருகிறது. ஆசிய பசிபிக் பகுதியில் மிகவும் புகழ் பெற்ற வர்த்தக நிறுவனமாக ஐஐஎஃப்டி திகழ்கிறது. இந்தியக் கல்வித்துறையில் துடிப்பான தலைமைத் தேவை. நமது மாணவர்களுக்கு சிறந்த தொழில்நுட்பம், வெளிநாட்டுச் சட்டம், பொருளாதாரம் மற்றும் சர்வதேச வர்த்தகம், குறித்த வெளிப்பாடுத் தேவை. இதற்காக இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலகம் முழுவதும் உள்ள பிரபலக் கல்வி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறினார்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1765761

*****************


(Release ID: 1765830) Visitor Counter : 249


Read this release in: English , Urdu , Marathi , Hindi