மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்

ஆரோக்கியம் மற்றும் வளத்திற்கான மீன்கள் குறித்த இணையக் கருத்தரங்கை மீன்வளத் துறை ஏற்பாடு செய்தது

Posted On: 22 OCT 2021 2:03PM by PIB Chennai

இந்தியாவின் 75-வது ஆண்டு சுதந்திரத்தை குறிக்கும் விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தின் ஒரு பகுதியாக ஆரோக்கியத்திற்கான மீன்கள் மற்றும் வளத்திற்கான மீன்கள்எனும் தலைப்பிலான இணையக் கருத்தரங்கை இந்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் மீன்வளத் துறை ஏற்பாடு செய்தது.

மத்திய மீன்வளத் துறையின் செயலாளர் திரு ஜதீந்திர நாத் ஸ்வைன் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் அதிகாரிகள், வேளாண், கால்நடை மற்றும் மீன்வள பல்கலைக்கழக ஆசிரியர்கள், தொழில்முனைவோர், பண்ணை உரிமையாளர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மீன்வள மேம்பாட்டு ஆணையர் திரு ஐ ஏ சித்திக்கின் வரவேற்புரையுடன் நிகழ்வு தொடங்கியது. மீன்வளத்துறை செயலாளர் திரு ஜதீந்திரநாத் ஸ்வைன், இணை செயலாளர் (உள்நாட்டு மீன்வளத்துறை) திரு சாகர் மெஹ்ரா, மத்திய உள்நாட்டு மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் பி கே தாஸ் கருத்தரங்கில் உரையாற்றினர்.

தொடக்கவுரை ஆற்றிய மீன்வளத்துறை செயலாளர், மீன்வளத் துறையின் பரிணாம வளர்ச்சி குறித்து பங்கேற்பாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். நன்னீர் மீன் வளர்ப்பு ஊட்டச்சத்து நன்மைகளை அளிப்பதோடு வளத்தையும் அதிகரிக்கிறது என்று அவர் கூறினார்.

மீன் நுகர்வை அதிகரிப்பதற்காக மீன்வளத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், ஆராய்ச்சிகளை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். பிரதமரின் மத்சய சம்பதா திட்டத்தின் நன்மைகள் குறித்தும் கூட்டத்தில் விளக்கப்பட்டன. 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

 https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1765709 

*****************



(Release ID: 1765820) Visitor Counter : 236


Read this release in: English , Urdu , Hindi , Bengali