பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கடற்படைத் தளபதிகள் மாநாடு – 2021/02

Posted On: 21 OCT 2021 5:30PM by PIB Chennai

2021 அக்டோபர் 18 அன்று தொடங்கிய கடற்படைத் தளபதிகள் மாநாடு நான்கு நாட்கள் நடைபெற்ற ஆக்கப்பூர்வமான விவாதங்களை தொடர்ந்து இன்று நிறைவுற்றது.

தொடக்க அமர்வின் போது கடற்படைத் தளபதிகளிடையே பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் உரையாற்றினார். தேசிய பாதுகாப்புத் தொடர்பான விஷயங்களில் அவர்களுடன் அவர் உரையாடினார்.

முக்கியச் செயல்பாடுகள், பொருட்கள், தளவாடங்கள், மனித வள மேம்பாடு, பயிற்சி மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்கான இந்த மாநாட்டில் இந்திய கடற்படையின் அனைத்து பிரிவு தளபதிகளும் கலந்து கொண்டனர்.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்திய கடற்படையின் பங்கு

குறித்துப் பேசிய அவர், நமது நாட்டின் புவியியல் இருப்பிடம் பல வழிகளில் தனித்துவமானது. மூன்று பக்கங்களிலும் பரந்த கடல் பரப்பளவு அமைந்துள்ள நமது நாடு, உத்தி சார்ந்த, வர்த்தகம் மற்றும் வளங்களின் பார்வையில் மிகவும் முக்கியமானது, என்று கூறினார். 

 பொறுப்பான கடல்சார் பங்குதாரராக ஒருமித்தக் கொள்கைகள் மற்றும் அமைதியான, வெளிப்படையான, விதிகள் அடிப்படையிலான நிலையான உலக ஒழுங்கை இந்தியா ஆதரிக்கிறது என்று கூறிய அவர், இந்த கடல் பாதையில் ஒரு முக்கியமான நாடாக இருப்பதால் இந்த பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதில் நமது கடற்படையின் பங்கு மிகவும் முக்கியமானது என்றார். இந்த பொறுப்புகளை கடற்படை திறம்பட நிறைவேற்றுவது குறித்து பாதுகாப்பு அமைச்சர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

 மாநாட்டின் போது ராணுவ, கடற்படை மற்றும் விமானப்படை தலைவர்களுடன் தளபதிகள் பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக உரையாடினர். மாநாட்டிற்கு தலைமை வகித்த கடற்படைத் தலைவர் அட்மிரல் கரம்பீர் சிங், தயார்நிலை, திறன் மேம்படுத்தல், நம்பகத்தன்மை, பாதுகாப்பு, உள்கட்டமைப்பு வளர்ச்சி, மனித வள மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து தளபதிகளுடன் பேசினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் 

httpspib.gov.inPressReleasePage.aspxPRID=1765507

*****************


(Release ID: 1765570) Visitor Counter : 222


Read this release in: English , Urdu , Hindi , Malayalam