தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
தொழிலாளர்களின் நலன் முக்கியம்: மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் பேச்சு
Posted On:
20 OCT 2021 6:06PM by PIB Chennai
அமைப்பு சாரா மற்றும் அமைப்பு சார்ந்த துறைகளில் தொழிலாளர்களின் நலன் முக்கியம் மற்றும் பாலின நீதியை உறுதி செய்வதை நோக்கி மத்திய அரசு பணியாற்றுகிறது என மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் கூறியுள்ளார்.
தொழிலாளர் தலைமை ஆணையர் அமைப்பின் மாற்றியமைக்கப்பட்ட அடையாள சின்னத்தை மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் இத்துறையின் இணையமைச்சர் திரு ராமேஷ்வர் தெரி கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் திரு பூபேந்தர் யாதவ் கூறியதாவது:
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பாலின நீதியை உறுதி செய்வதையும் மற்றும் எளிதாக வாழ்வது, எளிதாக தொழில் செய்வது நோக்கியும் பணியாற்றுகிறது. புதிய தொழிலாளர் விதிமுறைகள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சார்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நலனை அமல்படுத்துவதில் தொழிலாளர் தலைமை ஆணையர் அமைப்பின் பொறுப்பை அதிகரிக்கும். தற்போது தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நடைமுறை, தொழிலாளர் சட்டங்களை, வேலை அளிக்கும் நிறுவனங்கள் பின்பற்ற உதவும்.
அமைப்பு சாரா தொழிலாளர்கள் பற்றிய தரவுகள் முன்பு இல்லாமல் இருந்தது. தற்போது மத்திய அரசு அவர்களுக்காக இ-ஷ்ரம் என்ற இணையதளத்தை தொடங்கியுள்ளது. குறுகிய காலத்துக்குள் இதில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் 4 கோடி பேர் பதிவு செய்துள்ளனர்.
***
(Release ID: 1765284)
Visitor Counter : 243