சுற்றுலா அமைச்சகம்

‘பவுத்த வட்டாரங்களில் சுற்றுலா - முன்னோக்கி செல்லும் வழி’ என்ற இரண்டு நாள் மாநாட்டை குஷிநகரில் சுற்றுலா அமைச்சர் தொடங்கி வைத்தார்

Posted On: 20 OCT 2021 7:06PM by PIB Chennai

குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வை முன்னிட்டு, ‘பவுத்த வட்டாரங்களில் சுற்றுலா - முன்னோக்கி செல்லும் வழிஎன்ற மாநாட்டை இரண்டு நாள் மாநாட்டை சுற்றுலா அமைச்சகம் ஏற்பாடு செய்தது.

மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி இதை தொடங்கி வைத்தார். மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா, கலாச்சார இணை அமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால், விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் ஜெனரல் (ஓய்வு) வி கே சிங், வெளியுறவு விவகாரங்கள் மற்றும் கலாச்சாரம் இணை அமைச்சர் திருமிகு மீனாட்சி லேகி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பேசிய திரு ஜி கிஷன் ரெட்டி, புத்த ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் ஒரு பகுதியாக குஷிநகர், ஸ்ரவஸ்தி மற்றும் கபிலவஸ்து ஆகியவற்றைச் சுற்றி உருவாக்கப்பட்ட பவுத்த சர்க்யூட் குறித்து எடுத்துரைத்தார். மத்தியப் பிரதேசம், பீகார், குஜராத் மற்றும் ஆந்திரா போன்ற நாட்டின் பிற பகுதிகளில் ஏற்கெனவே நிறைவு செய்யப்பட்டுள்ள பவுத்த சுற்றுலாத் திட்டங்கள் பற்றியும் அவர் பேசினார்.

திபெத்திய ஆய்வுகள், சாரநாத், மத்திய புத்த கல்வி நிறுவனம், லே, நவ நாளந்தா மகாவிஹாரா, நாளந்தா, இந்தியாவில் உள்ள பல்வேறு சிறப்பு நிறுவனங்களின் மூலம் புத்த மதத்தின் படிப்புகளை மேம்படுத்துவதற்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுவதைப் பற்றியும் அவர் பேசினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியால் எடுக்கப்பட்ட முயற்சிகளைப் பற்றி பேசிய அவர், “பெளத்த நாடுகளுடனான இந்தியாவின் உறவை வலுப்படுத்துவதை நமது பிரதமர் தமது தர்மமாக எடுத்துக்கொண்டார். குஷிநகர் சர்வதேச விமான நிலையம் புத்த மதத்தினரின் பயணத்தை எளிதாக்கும் மற்றொரு நடவடிக்கையாகும். உலகெங்கிலும் உள்ள துறவிகள் மற்றும் யாத்ரீகர்கள் புத்தருடன் தொடர்புடைய இந்த மதிப்புமிக்க இடத்தைப் பார்வையிட வருவார்கள்,” என்றார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1765252

*****************



(Release ID: 1765279) Visitor Counter : 227


Read this release in: English , Urdu , Hindi , Punjabi