தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
ஆகஸ்ட் மாதத்தில் 14.81 லட்சம் சந்தாதாரர்களை இணைத்துள்ளது இபிஎப்ஓ
Posted On:
20 OCT 2021 6:48PM by PIB Chennai
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இபிஎப்ஓ) தற்காலிக ஊதியத் தரவு அறிக்கையை இன்று வெளியிட்டது. இதில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 14.81 லட்சம் நிகரச் சந்தாதாரர்களை சேர்த்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் சந்தாதாரர்கள் சேர்ப்பு, ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 12.61 சதவீதம் அதிகரித்துள்ளது.
மொத்தம் சேர்க்கப்பட்ட 14.81 லட்சம் சந்தாதாரர்களில், 9.19 லட்சம் பேர் புதிய உறுப்பினர்கள். வேலை மாற்றம் காரணமாக, 5.62 லட்சம் நிகரச் சந்தாதாரர்கள் வெளியேறி, மீண்டும் இணைந்துள்ளனர். இவர்கள் முந்தைய நிறுவனங்களில் இருந்து தங்கள் பி.எப் கணக்குகளை மாற்றி, உறுப்பினர்களாக தொடர்கின்றனர்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1765231
***
(Release ID: 1765268)
Visitor Counter : 261