சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
வர்த்மான் மகாவீர் மருத்துவக் கல்லூரி மற்றும் சப்தர்ஜங் மருத்துவமனையில் விரிவான புத்துயிர் பயிற்சி மையத்தை டாக்டர் பாரதி பவார் திறந்து வைத்தார்
Posted On:
20 OCT 2021 7:02PM by PIB Chennai
வர்த்மான் மகாவீர் மருத்துவக் கல்லூரி மற்றும் சப்தர்ஜங் மருத்துவமனையில் விரிவான புத்துயிர் பயிற்சி மையத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல இணை அமைச்சர் டாக்டர் பாரதி பவார் இன்று திறந்து வைத்தார்.
உயிர் காக்கும் திறமைகளில் பயிற்றுவிக்கப்படும் முதல் பிரிவுக்கான அறிமுக நிகழ்ச்சியும் இன்று நடத்தப்பட்டது. பயிற்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய டாக்டர் பவார், "அவசரக் காலங்களில் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற அனைத்து சுகாதார வழங்குநர்களுக்கும் பயிற்சி அளிப்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும்,” என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், எந்தவொரு மருத்துவமனையிலும் பணிபுரியும் அனைவரும் உயிர் காக்கும் திறன்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் உயிர் காக்கும் திறன்கள் குறித்து பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடையே விழிப்புணர்வு உருவாக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
அசம்பாவிதம் ஏதேனும் நடக்கும் போது பார்வையாளர்களின் சரியான நேரத்தில் தலையீடு ஒரு நோயாளியின் உயிரைக் காப்பாற்ற முடியும், ஒவ்வொரு நிமிடமும் மிகவும் முக்கியம் என்று அவர் கூறினார்.
மருத்துவ உதவி கிடைக்கும் வரை எளிய நடைமுறைகளின் மூலம் நோயாளியை பிழைக்க வைக்கும் வாய்ப்புகளை அதிகப்படுத்தலாம் என்று டாக்டர் பாரதி பவார் மேலும் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1765244
*****************
(Release ID: 1765267)
Visitor Counter : 237