பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
விடுதலையின் அம்ரித் மகோத்ஸவம்: மாணவர்களுக்கான கல்விச் சுற்றுலாவை ஓஎன்ஜிசி தொடர்ந்து நடத்துகிறது
Posted On:
20 OCT 2021 5:22PM by PIB Chennai
நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடும் விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தின் ஒரு பகுதியாக, தனது நான்கு பணியிடங்களில் மாணவர்களுக்கான கல்விச் சுற்றுலாவை எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனமான ஓஎன்ஜிசி ஏற்பாடு செய்தது.
குஜராத்தில் உள்ள அங்கலேஷ்வர் தளத்தில் அக்டோபர் 5 மற்றும் 6 அன்று நடைபெற்ற இந்நிகழ்வில் கேந்திரிய வித்யாலயாவைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்ட மாணவர்கள் எண்ணெய் சேமிப்பு மையம் மற்றும் பணியிடம் உள்ளிட்டவற்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு எண்ணெய் உற்பத்திக் குறித்த தொழில்நுட்ப விஷயங்கள் குறித்து அவர்களுக்கு விளக்கப்பட்டது.
அகர்தலாவில் உள்ள ஓஎன்ஜிசி காலனியில் செயல்படும் கேந்திரிய வித்யாலயாவை சேர்ந்த சுமார் 60 மாணவர்கள், அங்குள்ள எண்ணெய் மையத்தை பார்வையிட்டனர். ஓஎன்ஜிசி நிறுவனம் மற்றும் அதன் எரிசக்தி வர்த்தகம் குறித்தும் அவர்களுக்கு விளக்கப்பட்டது.
பின்னர், மையத்தை சுற்றிப் பார்த்த மாணவர்களுக்கு அங்குள்ள வசதிகளின் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1765201
*****************
(Release ID: 1765249)
Visitor Counter : 178