அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

குஜராத் விவசாயி மூலம் உருவாக்கப்பட்டுள்ள மருந்தின் மூலம் கறவை மாடுகளை தாக்கும் மாஸ்டிடிஸ் நோயை எதிர்த்துப் போராட முடியும்

Posted On: 20 OCT 2021 3:43PM by PIB Chennai

குஜராத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் பகிர்ந்த பண்டைய முறையைப் பயன்படுத்தி, கறவை கால்நடைகளை தாக்கும் மடி வீக்க தொற்று நோயான மாஸ்டிடிஸுக்கு சிகிச்சையளிக்க செலவு குறைந்த மூலிகை மருந்து ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

நேஷனல் இன்னோவேஷன் ஃபவுண்டேஷன் (என்ஐஎஃப்) உருவாக்கியுள்ள மஸ்திராக் ஜெல் என்ற மருந்து, தொழில்துறை பங்குதாரர் ராகேஷ் பார்மாசூட்டிகல்ஸ் மூலம் வணிகமயமாக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் கால்நடை மருந்துகளை விற்கும் மருந்து கடைகளில் இதை வாங்கலாம்.

மாஸ்டிடிஸ் என்பது ஒரு பொதுவான தொற்று நோயாகும். பால் உற்பத்தி திறனை வீழ்ச்சியடைய வைப்பதன் மூலம் பண்ணை உற்பத்தித்திறனை இது பாதிக்கிறது, இதனால் வருமானத்தை உருவாக்கும் செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன.

ஆன்டிபயாடிக்ஸ் கொண்டு பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு சிகிச்சையளிப்பது பொது சுகாதார ஆபத்தை ஏற்படுத்துகிறது. எனவே, ஆண்டிபயாடிக் சிகிச்சையின் குறைந்தபட்ச பயன்பாட்டுடன் தொழில்நுட்பங்கள் மற்றும் பொருட்களை விரிவுப்படுத்துவது மாஸ்டிடிஸ் மேலாண்மைக்கு தேவைப்படுகிறது.

 

இதை கருத்தில் கொண்டு இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் தன்னாட்சி பெற்ற நிறுவனமான நேஷனல் இன்னோவேஷன் ஃபவுண்டேஷன், திரு பேச்சார்பாய் சாமத்பாய் தேவ்கனியா பகிர்ந்த தகவல்களின் அடிப்படையில் இந்த பிரத்யேக மூலிகை மருந்து உருவாக்கப்பட்டுள்ளது.

குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, மத்தியப் பிரதேசம், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய எட்டு மாநிலங்களில் உள்ள பண்ணை உரிமையாளர்கள் மஸ்திராக்-ஆன்டிமாஸ்டிடிஸ் மூலிகை மருந்தை பயன்படுத்தி பயனடைந்துள்ளனர். ஆன்டிபயாடிக்ஸ் பயன்பாட்டை இது குறைத்துள்ளதோடு குறைந்த செலவில் சிகிச்சை அளிக்கவும் இது உதவுகிறது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1765163

*****



(Release ID: 1765194) Visitor Counter : 229


Read this release in: English , Urdu , Hindi , Punjabi