பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

முப்படைகளுக்கு இடையேயான 72-வது கால்பந்து போட்டி

இடுகை இடப்பட்ட நாள்: 20 OCT 2021 2:22PM by PIB Chennai

2021 அக்டோபர் 15 முதல் 20 வரை கொச்சியில் உள்ள மகாராஜா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற முப்படைகளுக்கு இடையேயான 72-வது கால்பந்து போட்டியில் இந்திய கடற்படை, ராணுவம் சிகப்பு, ராணுவம் பச்சை மற்றும் இந்திய விமானப் படை ஆகிய அணிகள் பங்கேற்றன.

கொச்சியில் உள்ள தெற்கு கடற்படை பிரிவின் சார்பாக சிக்னல் பள்ளியால் இந்த நான்கு நாள் கால்பந்து போட்டி நடத்தப்பட்டது. ஆர்மி ரெட் மற்றும் விமானப்படை அணிகளுக்கிடையே நடைபெற்ற இறுதிப் போட்டியில் விமானப்படை அணி வெற்றி பெற்றது.

2021 அக்டோபர் 20 அன்று நிறைவு நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட தெற்கு கடற்படை பிரிவின் தலைவர் ரியர் அட்மிரல் அந்தோனி ஜார்ஜ் விமானப்படை அணிக்கு கோப்பையை வழங்கியதோடு, இறுதி போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு பதக்கங்களை வழங்கினார்.

சீனியர் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் 2021-22-க்கான முப்படைகளின் கால்பந்து அணியை தேர்வு செய்வது இந்த போட்டியின் நோக்கமாகும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1765128

*****


(வெளியீட்டு அடையாள எண்: 1765185) வருகையாளர் எண்ணிக்கை : 238
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Malayalam , Urdu