சுற்றுலா அமைச்சகம்
அக்டோபர் 20, 21-ம் தேதிகளில் குஷிநகரில் நடைபெறவுள்ள ‘பவுத்த வட்டாரங்களில் சுற்றுலா - முன்னோக்கி செல்லும் வழி’ என்ற மாநாட்டில் சுற்றுலாத்துறை அமைச்சர் உரையாற்றுகிறார்
प्रविष्टि तिथि:
19 OCT 2021 5:52PM by PIB Chennai
குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை 2021 அக்டோபர் 20-ம் தேதி பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். இலங்கையின் கொழும்பில் இருந்து தரையிறங்கவுள்ள முதல் விமானத்தில் புத்த பிக்ஷூக்கள் உள்ளிட்ட 123 பிரமுகர்கள் வரவுள்ளன்னர்.
இந்த நிகழ்வுக்குப் பிறகு, 2021 அக்டோபர் 20 அன்று பிற்பகல் 3 மணிக்கும், 21 அன்று காலை 10 மணிக்கும் குஷிநகரில் உள்ள ஹோட்டல் ராயல் ரெசிடென்சியில் ‘பவுத்த வட்டாரங்களில் சுற்றுலா - முன்னோக்கி செல்லும் வழி’ என்ற மாநாட்டை சுற்றுலா அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.
இம்மாநாட்டின் தொடக்க அமர்வில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி உரையாற்றவுள்ளார். குஷிநகரில் புதிய சர்வதேச விமான நிலையம் திறக்கப்படுவதை தொடர்ந்து பவுத்த சுற்றுலாவை முன்னிலைப்படுத்தும் அமர்வுகள் இந்த இரண்டு நாள் மாநாட்டில் இருக்கும். சுற்றுலாத்துறை பங்குதாரர்கள், அறிஞர்கள், ஊடகத்தினர் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புத்தரின் வாழ்வோடு தொடர்புடைய பல பழமையான முக்கிய இடங்களை இந்தியா தன்னகத்தே கொண்டுள்ளது. உலகம் முழுவதிலுமிருந்து புத்த மத நம்பிக்கையாளர்களை புத்தரின் பூமியான இந்தியாவிற்கு இழுக்கும் மிகப்பெரிய ஆற்றலை பவுத்த சுற்றுலா கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1764931
*******
(रिलीज़ आईडी: 1764962)
आगंतुक पटल : 244