அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

சூரிய வானிலை முன்னறிவிப்புகளை மேம்படுத்த உதவும் முக்கிய கண்டுபிடிப்பை இந்திய விஞ்ஞானிகள் செய்துள்ளனர்

Posted On: 18 OCT 2021 3:48PM by PIB Chennai

சூரிய மண்டலத்தில் சிதறி உள்ள காந்தப்புலங்கள் அல்லது செயல்பாட்டில் உள்ள பகுதிகளை ஆராயும் வானியலாளர்கள், சூரியனின் பகுதியிலுள்ள காந்தப் புலன்களின் மாறும் அமைப்பு ஒளி உமிழ்வு ஏற்படுவதை தீர்மானிக்கும் என கண்டறிந்துள்ளனர்.

பூமியில் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகள் மற்றும் விண்வெளியில் உள்ள செயற்கைக்கோள் அமைப்புகளை பாதிக்கும் சூரிய வானிலை முன்னறிவிப்புகளை மேம்படுத்த இந்த புரிதல் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் தன்னாட்சி பெற்ற நிறுவனமான பெங்களூருவில் உள்ள இந்திய வானியற்பியல் நிறுவனத்தை சேர்ந்த டாக்டர் வேமா ரெட்டி இந்த தனித்துவமான நிகழ்வை முதலில் கண்டறிந்தார்.

விண்வெளியில் நாசாவின் சோலார் டைனமிக்ஸ் ஆய்வகத்தால் ஒவ்வொரு 12 நிமிடங்களுக்கும் எடுக்கப்பட்ட சூரியனின் காந்த மற்றும் கரோனல் படங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த வானியல் நிகழ்வை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.

ஆய்வின் முடிவுகள் ராயல் அஸ்ட்ரானமிகல் சொசைட்டியின் மன்த்லி நோடீசஸ் சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

வெளியிட்டு இணைப்பு: https://doi.org/10.1093/mnras/stab2401

மேலதிக விவரங்களுக்கு, டாக்டர் பி வேமா ரெட்டியை (vemareddy@iiap.res.in) தொடர்பு கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1764677

 

-----



(Release ID: 1764727) Visitor Counter : 180


Read this release in: English , Urdu , Hindi , Telugu