சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
ஏழைகளுக்கு மகிழ்ச்சியையும், செழிப்பையும் உறுதி செய்வதுதான் பிரதமர் திரு நரேந்திர மோடி மேற்கொள்ளும் பணி: மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி
Posted On:
17 OCT 2021 3:53PM by PIB Chennai
ஏழைகளுக்கு மகிழ்ச்சியையும், செழிப்பையும் உறுதி செய்வதுதான் பிரதமர் திரு நரேந்திர மோடி மேற்கொள்ளும் பணி என மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வி கூறினார்.
உத்தரப் பிரசேதம் ராம்பூரில் உள்ள மகாத்மா காந்தி ஸ்டேடியத்தில் சுமார் 2000 மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு பல வகை மருத்துவ உதவி உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. கான்பூரில் உள்ள அலிம்கோ நிறுவனம், மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, நடக்க உதவும் ஊன்றுகோல், காதுகேட்கும் கருவிகள் உட்பட பல பொருட்களை இலவசமாக வழங்கியது.
இந்நிகழ்ச்சியில் மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வி, சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் ஏ.நாராயணசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் திரு முக்தார் அப்பாஸ் நக்வி பேசுகையில், ‘‘ கடந்த 7 ஆண்டுகளில் சிறந்த நிர்வாகம், அனைத்தும் உள்ளடங்கிய வளர்ச்சி மற்றும் ஏழைகளின் மேம்பாட்டில் மத்திய அரசு கவனம் செலுத்தியது. ஏழைகளுக்கு மகிழ்ச்சியையும், செழிப்பையும் உறுதி செய்வதுதான் பிரதமர் திரு நரேந்திர மோடி மேற்கொள்ளும் பணி’’ என கூறினார்.
ராம்பூர் நுமைஸ் மைதானத்தில் நடத்தப்பட்ட கைவினைப் பொருட்கள் கண்காட்சியையும் திரு நக்வி பார்வையிட்டார். இதில் 30 மாநிலங்களைச் சேர்ந்த 700 கைவினை கலைஞர்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1764520
***
(Release ID: 1764540)
Visitor Counter : 277