குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

வாரணாசியில் காதி கண்காட்சி மற்றும் காதி கலைஞர்களின் மாநாடு: மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார்

Posted On: 17 OCT 2021 4:15PM by PIB Chennai

வாரணாசியில் நவீன காதி கண்காட்சியை இன்று மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை இணையமைச்சர் திரு பானு பிரதாப் சிங் வர்மா இன்று தொடங்கி வைத்தார். இதில் 20 மாநிலங்களைச் சேர்ந்த கைவினைப் பொருட்கள் 105 அரங்குகளில் காட்சிக்கு வைக்கப்பட்டன.  காதி கலைஞர்களின் மாநாட்டையும், காதி கிராம தொழில் ஆணையம் நடத்தியது. இதில் 2000 காதி கலைஞர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் பெரும்பாலானோர் வாரணாசி மற்றும் அருகில் உள்ள 12 மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள்.

 

இந்த கண்காட்சி மற்றும் மாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக காதி கிராம தொழில் ஆணையத்தை மத்திய இணையமைச்சர் திரு திரு பானு பிரதாப் சிங் வர்மா பாராட்டினார். இந்த கண்காட்சியும், மாநாடும், காதி கலைஞர்களை வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது என மத்திய அமைச்சர் திரு பானு பிரதாப் சிங் வர்மா  கூறினார்.  இந்த கண்காட்சி, காதி கலைஞர்களுக்கு தங்கள் தயாரிப்புகளை விற்பதற்கான தளத்தை வழங்கும் எனவும், அவர்களின் வருமானம் அதிகரிக்கும் என்றும் மத்திய அமைச்சர் கூறினார்.

வாரணாசியில் நடைபெறும் மாநில அளவிலான காதி கண்காட்சி, தற்சார்பு இந்தியாவுக்கு காதி கலைஞர்களின் உறுதியின் வெளிப்பாடு என காதி கிராம தொழில் ஆணையத்தின் தலைவர் திரு சக்சேனா கூறினார்.

 

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1764521



(Release ID: 1764529) Visitor Counter : 233