உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்

”உலக உணவு தினத்தில் உணவு தொழில்நுட்ப கருத்தரங்கு 2021: உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகம் நடத்தியது.”

Posted On: 16 OCT 2021 4:53PM by PIB Chennai

உலக உணவு தினத்தை கொண்டாட, பிரதமரின் சிறு உணவு பதப்படுத்தும் தொழில்களை முறைப்படுத்துதல் திட்டத்தின் கீழ் உணவு தொழில்நுட்ப கருத்தரங்கை உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகம் இன்று நடத்தியது. உணவு தொழில்நுட்ப துறையில் உள்ளவர்கள் புதிய நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் குறித்து ஆலோசிப்பதற்காக இந்த கருத்தரங்கு நடத்தப்பட்டது. இதில் உரையாற்றிய உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் திரு மின்ஹஜ் ஆலம், இந்திய பொருளாதார வளர்ச்சியில் சிறு உணவு பதப்படுத்துதல் தொழில்துறையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இந்த கூட்டத்தில் பிரபல தொழில்துறை நிபுணர்கள் கலந்து கொண்டு சிறு உணவு பதப்படுத்துதல் தொழில்துறையின் செயல்பாடுகள் குறித்து தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

உணவு பாதுகாப்பை அடைவதில், சிறு உணவு நிறுவனங்களின் பங்கு குறித்து ஆசியா பசிபிக் ஊரக மற்றும் வேளாண் கடன் சங்கத்தின் பொது செயலாளர் டாக்டர். பிரசன்ன குமார் தாஸ் பேசினார். ”உள்நாட்டு உணவு விற்பனை மற்றும் சிறு நிறுவனங்களில் பதப்படுத்துதல்என்ற தலைப்பிலான அமர்வில், மரிக்கோ இந்தியா அமைப்பின் தலைவர் டாக்டர். பிரபோத் ஹால்டே பேசினார்.

புதிய தலைமுறை உணவு மற்றும் தொழில்துறை குறித்து பிரவின் மசேல் நிறுவனத்தின் தலைவர் திரு. ஆனந்த் பேசினார். சிறு உணவு தொழில்துறையில் ஏற்றுமதிக்கான சாத்தியங்கள் குறித்து வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையத்தின் (அபேடா) அமைப்பின் துணை பொதுச் மேலாளர் திரு. பித்யுத் பருவா பேசினார். பிரதமரின் சிறு உணவு பதப்படுத்தும் தொழில்களை முறைப்படுத்துதல் திட்டத்தின் அறிமுகம் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான நடைமுறை குறித்து தஞ்சாவூரில் உள்ள உணவு தொழில்நுட்ப தொழில் முனைவு மற்றும் மேலாண்மை தேசிய மையத்தின் திருமிகு. டோனிசா திக்ஷித் பேசினார். இந்த கருத்தரங்கில் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1764363

*****(Release ID: 1764380) Visitor Counter : 227


Read this release in: Urdu , English , Marathi , Hindi