பாதுகாப்பு அமைச்சகம்

இந்திய-அமெரிக்க ராணுவங்களின் கூட்டு பயிற்சி அலஸ்காவில் தொடக்கம், மெட்ராஸ் அணியை சேர்ந்த இந்திய வீரர்கள் பங்கேற்பு

Posted On: 16 OCT 2021 2:02PM by PIB Chennai

இந்திய-அமெரிக்க கூட்டு ராணுவ பயிற்சியின் 17-வது பதிப்பான "எக்ஸ் யுத் அபியாஸ் 2021", எல்மெண்டோர்ஃப்-ரிச்சர்ட்சன், அலாஸ்கா (அமெரிக்கா) கூட்டு தளத்தில் 2021 அக்டோபர் 15 அன்று தொடங்கியது. துவக்க விழாவில் இரு நாடுகளின் தேசிய கொடிகள் ஏற்றபட்டதோடு, இரு நாடுகளின் தேசிய கீதங்களான ஜன கண மனமற்றும் தி ஸ்டார் ஸ்பாங்கில்ட் பேனர்இசைக்கப்பட்டன.

இந்திய-அமெரிக்க ராணுவ ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக 2021 அக்டோபர் 15 முதல் 29 வரை இந்த பயிற்சி நடைபெறுகிறது. 7 மெட்ராஸ் இன்ஃபான்ட்ரி பட்டாலியன் பிரிவை சேர்ந்த 350 வீரர்களை கொண்ட இந்திய குழுவும், ஃபர்ஸ்ட் ஸ்குவாட்ரான் பிரிவை (வான்வழி) சேர்ந்த 350 அமெரிக்க வீரர்களும் இதில் பங்கேற்கின்றனர். 

இரு நாடுகளாலும் இணைந்து நடத்தப்படும் இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே நீண்ட காலமாக நடைபெற்று வரும் ராணுவப் பயிற்சி மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு முயற்சியின் 17-வது பதிப்பு இதுவாகும். ஐக்கிய நாடுகள் சபையின் அறிவுறுத்தல் படி தீவிரவாத எதிர்ப்பு பயிற்சிகள் மேற்கொள்ளப்படும்.

துவக்க நிகழ்ச்சியில் உரையாற்றிய மேஜர் ஜெனரல் பிரையன் ஐஃப்லெர், அமெரிக்க ராணுவ தளபதி, அலாஸ்கா, இந்திய வீரர்களை வரவேற்றதோடு, பயிற்சியின் நோக்கத்தை பூர்த்தி செய்யும் விதத்தில் இரு நாட்டு குழுக்களும் இணைந்து செயல்படுதலை மேம்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கருத்துகள், சிந்தனைகள் மற்றும் சிறந்த செயல்பாடுகளை சுதந்திரமாக பரிமாறிக் கொள்ளுமாறு வலியுறுத்திய அவர், ஒருவரது அனுபவங்களில் இருந்து அடுத்தவர் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

இதற்கு முந்தைய பதிப்பு 2021 பிப்ரவரியில் ராஜஸ்தானின் பிகானெரில் உள்ள மகாஜன் துப்பாக்கி சுடும் தளத்தில் நடைபெற்றது. இரு நாடுகளுக்கிடையே வளர்ந்து வரும் ராணுவ ஒத்துழைப்பின் மற்றுமொரு முன்னேற்றமாக இது விளங்குகிறது.

இரு ராணுவங்களுக்கிடையே புரிதல், ஒத்துழைப்பு மற்றும் இணைந்து செயல்படுதல் ஆகியவற்றை மேம்படுத்துவதை இந்த பயிற்சி நோக்கமாக கொண்டுள்ளது. குளிர் பருவ நிலைகளில் பயிற்சிகளை மேற்கொள்ளுதல் குறித்த பகிர்தல்கள் மற்றும் ஒரு தரப்பின் சிறந்த செயல்முறைகளை மற்றொரு தரப்பு கற்று கொள்ளுதல் ஆகியவை இந்த கூட்டு பயிற்சியின் முக்கிய நோக்கங்களாகும்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=17643338

*******(Release ID: 1764356) Visitor Counter : 753


Read this release in: English , Urdu , Hindi