தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

அகில இந்திய வானொலியின் கொடைக்கானல் மற்றும் சென்னை ரெயின்போ அலைவரிசைகளின் நேயர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted On: 14 OCT 2021 2:31PM by PIB Chennai

அகில இந்திய வானொலி அலைவரிசைகளின் சர்வதேச அளவிலான (இந்தியாவை தவிர) மதிப்பீடுகளின் படி, கொச்சி எஃப் எம் மற்றும் ரெயின்போ கன்னட காமான்பிலு முதல் பத்து இடங்களில் மீண்டும் இடம்பிடித்துள்ளன. அகில இந்திய வானொலியின் கொடைக்கானல் மற்றும் சென்னை ரெயின்போ அலைவரிசைகளும் தரவரிசையில் முன்னேறியுள்ளன. முதல் பத்து இடங்களில் இவை முறையே ஆறு மற்றும் ஏழாவது இடங்களை பிடித்துள்ளன.

நியூஸ் ஆன் ஏர் செயலியில் அகில இந்திய வானொலி நேரலைகள் மிகவும் பிரபலமான உலகின் முன்னணி நாடுகளின் (இந்தியாவை தவிர) சமீபத்திய தரவரிசையில் உள்ள முதல் 25 நாடுகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நேபாளம் முதல் மேற்கு ஆசிய நாடுகளான இஸ்ரேல், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பஹ்ரைன், குவைத் மற்றும் ஓமன், ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, பின்லாந்து, நெதர்லாந்து மற்றும் ஜெர்மனி ஆகியவை இந்த பட்டியலில் அடங்கும்.

இந்த முதல் 25 நாடுகளுக்கான அகில இந்திய வானொலி நேரலை தரவரிசையில், அகில இந்திய வானொலி உலக சேவை, அகில இந்திய வானொலி குஜராத்தி, அகில இந்திய வானொலி பஞ்சாபி மற்றும் அகில இந்திய வானொலி நியூஸ் 24*7 ஆகியவை பாகிஸ்தானில் பிரபலமாக உள்ளன, அதே நேரத்தில் எஃப் எம் கோல்ட் தில்லி, எஃப் எம் ரெயின்போ தில்லி மற்றும் விவித் பாரதி ஆகியவை இஸ்ரேலில் மிகவும் பின்தொடரப்படுகின்றன.

சிறந்த அகில இந்திய வானொலி ஸ்ட்ரீம்களுக்கான நாடுகளின் தரவரிசையில் (இந்தியாவை தவிர), எம் கோல்ட் தில்லி மற்றும் எஃப் எம் ரெயின்போ தில்லி ஆகியவை அமெரிக்கா, இங்கிலாந்து, பிஜி, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, ஜப்பான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் மிகவும் பிரபலமாக உள்ளன.

அகில இந்திய வானொலியின் 240-க்கும் மேற்பட்ட வானொலிச் சேவைகள் பிரசார் பாரதியின் அதிகாரப்பூர்வ செயலியான நியூஸ் ஆன் ஏரில் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன. நியூஸ் ஆன் ஏர் செயலியில் உள்ள இந்த அகில இந்திய வானொலி ஸ்ட்ரீம்கள் இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் 85-க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிக எண்ணிக்கையிலான நேயர்களைக் கொண்டுள்ளன.

இந்த தரவரிசை 2021 செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 11 வரையிலான தரவை அடிப்படையாகக் கொண்டது.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1763871

****(Release ID: 1763974) Visitor Counter : 59