பாதுகாப்பு அமைச்சகம்

நாட்டின் வளர்ச்சிக்கு எல்லையோர சாலைகள் நிறுவனம் முக்கிய பங்காற்றுகிறது: பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்

Posted On: 14 OCT 2021 12:52PM by PIB Chennai

சேலா பிரதான சுரங்கத்தின் முக்கிய குழாயின் வெடிப்புக்கு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் காணொலி மூலம் தலைமை தாங்கினார். மேலும், எல்லையோர சாலைகள் நிறுவனம் ஏற்பாடு செய்த ‘இந்தியா @ 75 இருசக்கர வாகன பயணத்தையும்’ புதுதில்லியில் 2021 அக்டோபர் 14 அன்று அவர் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு ராஜ்நாத் சிங், அருணாச்சலப் பிரதேசத்தின் மேற்கு கமெங் மாவட்டத்தில் அமைந்துள்ள செலா சுரங்கப்பாதை, தேசிய பாதுகாப்பை மேம்படுத்துவதிலும், பிராந்தியத்தின் சமூக பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறினார்.

13,800 அடி உயரத்தில் அமைந்துள்ள செலா, 317 கிமீ நீளமுள்ள பலிபாரா-சர்துவார்-தவாங் (பிசிடி) சாலையில் அருணாசலப் பிரதேசத்தின் மேற்கு காமெங், கிழக்கு காமெங் மற்றும் தவாங் மாவட்டங்களை இணைக்கிறது. பயண நேரத்தை இது குறைப்பதோடு, தவாங்கிற்கு அனைத்து வானிலைகளிலும் இணைப்பை வழங்குகிறது.

தீவிர வானிலையை எதிர்கொண்டு சாலைகள், பாலங்கள், சுரங்கப்பாதைகள் மற்றும் விமானநிலையங்களை சாதனை உயரங்களில் அமைப்பதன் மூலமும், தொலைதூர பகுதிகளை இணைப்பு வரைபடங்களில் தெரியப்படுத்துவதன் மூலமும் தேசத்தின் முன்னேற்றத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வரும் எல்லையோர சாலைகள் நிறுவனத்தை திரு ராஜ்நாத் சிங் பாராட்டினார்.

எல்லை உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் எல்லையோர சாலைகள் நிறுவனத்தின் முயற்சிகள் ஆயுதப்படைகளின் செயல்பாட்டுத் தயார்நிலையை மேம்படுத்தியுள்ளதோடு, தொலைதூரப் பகுதிகளில் சுற்றுலாவை ஊக்குவித்து உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளதாக அவர் கூறினார். இந்த அதிநவீன சுரங்கப்பாதை தவாங்கிற்கு மட்டுமல்ல, முழு மாநிலத்திற்கும் ஒரு உயிர்நாடியாக இருக்கும் என்று அவர் மேலும் கூறினார். 

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1763830

*****



(Release ID: 1763953) Visitor Counter : 175


Read this release in: English , Urdu , Hindi , Telugu