குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

காந்தி ஜெயந்தி நாளில் குஜராத்தில் காதி விற்பனை அமோகம்

Posted On: 14 OCT 2021 12:46PM by PIB Chennai

பிரதமரின் வேண்டுகோளையடுத்து, காந்தி ஜெயந்தி நாளில், காந்தி பிறந்த மண்ணான குஜராத்தில் காதி விற்பனை அமோகமாக நடந்துள்ளது.

இந்தாண்டு அக்டோபர் 2ம் தேதி, குஜராத்தில் உள்ள 311 காதி விற்பனை நிலையங்களில் ரூ.3.25 கோடி அளவுக்கு பொருட்கள் விற்பனையாகியுள்ளது. குஜராத்தில் இந்தாண்டு காதி விற்பனை ரூ.33.12 லட்சம் அதிகரித்துள்ளது. இங்கு கடந்தாண்டு விற்பனையுடன் ஒப்பிடுகையில் 11.32 சதவீதம் அதிகம். கடந்தாண்டு காந்தி ஜெயந்தியில் குஜராத்தில் காதி விற்பனை ரூ.2.92 கோடி அளவுக்கு நடந்தது.

விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தின் ஒரு பகுதியாக, காதி விற்பனைக்கு ஊக்கம் அளிக்க, காதி கிராம தொழில் ஆணையம், அகமதாபாத், வதோதரா, சூரத் மற்றும் ராஜ்கோட்  ரயில் நிலையங்களில் கண்காட்சி அரங்குகளை அமைத்தது. இங்கு ரூ.5.14 லட்சத்துக்கு பொருட்கள் விற்பனையானது. இது தவிர சபர்மதி ஆற்றங்கரை, அகமதாபாத்தில் உள்ள இஸ்ரோ மையம், ஜிஎஸ்டி தலைமையகம் ஆகியவற்றில் சிறப்பு காதி அரங்குகள் அமைக்கப்பட்டன. இங்கு முறையே ரூ. 3.94 லட்சம்ரூ. 6.42 லட்சம் மற்றும் ரூ. 2.25 லட்சத்துக்கு பொருட்கள் விற்பனையாகின.

சவால்களுக்கு மத்தியிலும், அதிகளவிலான வாடிக்கையாளர்களை கவர, தரமான புதிய பொருட்களை அதிகளவில் காதி கிராம தொழில் ஆணையம் சேர்த்து வருவதாக அதன் தலைவர் திரு வினய் குமார் சக்சேனா தெரிவித்தார்.

 

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1763827

***


(Release ID: 1763949) Visitor Counter : 255