அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
நச்சுத்தன்மையற்ற கார்பனை உருவாக்க தேயிலை மற்றும் வாழை கழிவுகள் பயன்படுகின்றன
प्रविष्टि तिथि:
13 OCT 2021 2:19PM by PIB Chennai
தேயிலை மற்றும் வாழை கழிவுகளை பயன்படுத்தி நச்சுத்தன்மையற்ற ‘ஆக்டிவேடட் கார்பனை’ விஞ்ஞானிகள் குழு ஒன்று தயாரித்துள்ளது. தொழில்துறை மாசு கட்டுப்பாடு, நீர் சுத்திகரிப்பு, உணவு மற்றும் பானங்களின் பதப்படுத்துதல் மற்றும் துர்நாற்றம் நீக்குதல் போன்ற பலவற்றுக்கு இது பயன்படும். இதன் உற்பத்தி செலவும் குறைவாகும்.
தேயிலை பதப்படுத்துதலின் போது தூசி வடிவில் நிறைய கழிவுகள் உருவாகின்றன. இவற்றை பயனுள்ள பொருட்களாக மாற்றலாம். உயர்தர ஆக்டிவேட்டட் கார்பனாக இவற்றை மாற்றுவதற்கு சக்தி வாய்ந்த அமிலங்கள் தேவை என்பதால், நச்சுத்தன்மை உருவாகும். எனவே, இந்த சவாலுக்கு தீர்வு காண நச்சுத்தன்மை அற்ற முறை தேவைப்பட்டது.
இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி பெற்ற நிறுவனமான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான மேம்பட்ட ஆய்வு நிறுவனத்தின் (ஐஏஎஸ்எஸ்டி) முன்னாள் இயக்குநர் டாக்டர் என் சி தாலுக்தார் மற்றும் இணை பேராசிரியர் டாக்டர் தேவாசிஷ் சவுத்ரி ஆகியோர் தேயிலை கழிவுகளிலிருந்து ஆக்டிவேட்டட் கார்பனைத் தயாரிப்பதற்கு மாற்று செயல்பாட்டு ஊக்கியாக வாழைச் சாற்றைப் பயன்படுத்தினர்.
வாழைச் செடியில் உள்ள ஆக்ஸிஜனேற்றப்பட்ட பொட்டாசியம் கலவைகள் தேயிலை கழிவுகளிலிருந்து தயாரிக்கப்பட்ட கார்பனைச் செயல்படுத்த உதவுகின்றன. இதற்காக சமீபத்தில் இந்திய காப்புரிமை வழங்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1763581
-----
(रिलीज़ आईडी: 1763673)
आगंतुक पटल : 368