கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

வ உ சிதம்பரனார் துறைமுகம் பன்னோக்கு போக்குவரத்து பூங்கா திட்டத்தை அமல்படுத்த திட்டம்

Posted On: 11 OCT 2021 5:51PM by PIB Chennai

தென் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வல்லமை படைத்த வ உ சிதம்பரனார் துறைமுகம் தனக்குள்ள வசதி வாய்ப்புகளான ரயில் - சாலை இணைப்பு, முக்கிய கடல் வழி அருகாமை, அனைத்து பருவநிலைகளிலும் செயல்படக் கூடிய தன்மை, கிழக்கு மற்றும் மேற்கு கடலோரப் பகுதிகளுக்கு இணைப்பாக விளங்கக் கூடிய புவியியல் ரீதியிலான அமைப்பு ஆகியவற்றின் காரணமாக பன்னோக்கு போக்குவரத்து பூங்கா திட்டத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. தென்தமிழகத்தில் மிகப்பெரும் உற்பத்தி மையங்களாக திகழும் கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், ஈரோடு, பொள்ளாச்சி, கரூர், ராஜபாளையம், மதுரை போன்ற பகுதிகளுக்கு அருகாமையில் இருக்கும் துறைமுகமான வ உ சிதம்பரனார் துறைமுகம் இந்த முயற்சிக்கு பொருத்தமான துறைமுகமாக அமைந்துள்ளது.

சரக்குகளை தடையின்றி பன்னோக்கு போக்குவரத்து கட்டமைப்பின் வாயிலாகவும், குளிர்பதன வசதியுடன் கூடிய சேமிப்புக் கிடங்கு, இயந்திர வசதியுடன் சரக்குகளை கையாளும் திறன் கொண்ட கிடங்குகளைக் கொண்டதும் கண்டெய்னர்களை இடமாற்றம் செய்யக் கூடிய முனையங்களைக் கொண்டதாகவும் பெருமளவிலான சரக்குகளை கையாளும் திறன் கொண்டதுமான கிடங்குகள் ஆகியவற்றை ஒருங்கே கொண்டதாக இந்த பன்னோக்கு போக்குவரத்து பூங்கா அமையும்.

95 ஆயிரம் டன்னுக்கு மேல் பெருமளவிலான கொள்ளளவு கொண்டதும் 300 மீட்டர் நீளம் கொண்டதுமான சரக்குக் கப்பல்களை கையாளக் கூடிய 14.2 மீட்டர் நீளமுள்ள கப்பல் நிறுத்துமிடத்தைக் கொண்டதுமான இந்த துறைமுகத்தில் 17 கண்டெய்னர்களைக் கையாளும் மையங்கள் போன்றவை உள்ளன. இந்தத் துறைமுகத்திலிருந்து நாள்தோறும் கொழும்பு மற்றும் வாரந்தோறும் கிழக்கத்திய நாடுகளுக்கும் சரக்குக் கப்பல்கள் போக்குவரத்தை மேற்கொள்கின்றன.

------



(Release ID: 1763040) Visitor Counter : 170


Read this release in: English , Urdu , Hindi , Punjabi