வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
சிட்ரஸ் வகைப் பழங்கள் மற்றும் அதன் துணை தயாரிப்புகளின் ஏற்றுமதிக்கு ஐசிஏஆர் - மத்திய சிட்ரஸ் ஆராய்ச்சி மையத்துடன் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம் (அபேடா) புரிந்துணர்வு ஒப்பந்தம்
प्रविष्टि तिथि:
11 OCT 2021 4:47PM by PIB Chennai
சிட்ரஸ் வகைப் பழங்கள் மற்றும் அதன் துணைத் தயாரிப்புகளின் ஏற்றுமதிக்கு ஐசிஏஆர் மத்திய சிட்ரஸ் ஆராய்ச்சி மையத்துடன் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம் (அபேடா) புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் சிட்ரஸ் வகைப் பழங்களை உற்பத்தி செய்யும் மாநிலங்களில் ஏற்றுமதியை ஊக்குவிக்கும்.
இந்த இரு நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டுறவு ஏற்றுமதியின் பன்முகத்தன்மையில் கவனம் செலுத்தும். வேளாண் தயாரிப்புகளின் ஏற்றுமதியை அதிகரிக்கும். இதன் மூலம் இந்தியத் தயாரிப்புகள் சர்வதேசச் சந்தையை எட்டும். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி, அபேடா தலைவர் டாக்டர் எம் அங்கமுத்து இடையே நாக்பூரில் சமீபத்தில் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம், விவசாய உற்பத்தியாளர் சங்கங்கள், விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு வழிகாட்டுவதோடு அவற்றை சர்வதேச சந்தையுடன் இணைக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1762963
*******
(रिलीज़ आईडी: 1763003)
आगंतुक पटल : 353