பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பலதரப்பு கடல்சார் பயிற்சி மலபார் 2021 - வங்காள விரிகுடாவில் 12-15 அக்டோபர் 2021 வரை இரண்டாம் பகுதி

Posted On: 10 OCT 2021 5:57PM by PIB Chennai

ஜப்பானிய கடல்சார் சுய பாதுகாப்பு படை, ராயல் ஆஸ்திரேலியா கடற்படை மற்றும் அமெரிக்க கடற்படை உடன் பலதரப்பு கடல்சார் பயிற்சியான மலபாரின் இரண்டாம் பகுதியில் இந்திய கடற்படை பங்கேற்கும். வங்காள விரிகுடாவில் 12-15 அக்டோபர் 2021 வரை இந்த பயிற்சி நடைபெறும். பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் 26-29 ஆகஸ்ட் 2021 வரை முதல் கட்ட பயிற்சி நடைபெற்றது.

இந்திய கடற்படையில் இருந்து ஐஎன்எஸ் ரன்விஜய், ஐஎன்எஸ் சத்புரா, பி 8 நீண்ட தூர கடல் ரோந்து விமானம் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் உள்ளிட்டவை பங்கேற்கும். அமெரிக்க கடற்படை விமானம் தாங்கி கப்பல் யுஎஸ்எஸ் கார்ல் வின்சன், யுஎஸ்எஸ் லேக் சாம்ப்லைன் மற்றும் யுஎஸ்எஸ் ஸ்டாக் டேல் உள்ளிட்டவையும், ஜப்பானில் இருந்து ஜேஎஸ் காகா மற்றும் ஜேஎஸ் முரசாமே ஆகியவையும் கலந்து கொள்ளும். ராயல் ஆஸ்திரேலிய கடற்படையில் இருந்து எச்எம்ஏஎஸ் பல்லாரட் மற்றும் எச்எம்ஏஎஸ் சிரியஸ் உள்ளிட்டவை பங்கேற்கும்.

பயிற்சியின் முதல் கட்டத்தில் உருவான ஒருங்கிணைப்பு மற்றும் இணைந்து செயல்படுதல் உள்ளிட்டவற்றை இரண்டாம் கட்டம் வலுவூட்டும். மேம்பட்ட மேற்பரப்பு மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் போர் பயிற்சிகள், கடற்படை பரிணாமங்கள் மற்றும் ஆயுத பயன்பாடு ஆகியவற்றில் இப்பயிற்சி கவனம் செலுத்தும்.

1992-ம் ஆண்டில் இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையே வருடாந்திர இருதரப்பு கடற்படை பயிற்சியாக தொடங்கிய மலபார் தொடர் பயிற்சி, தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வந்துள்ளது. இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டு வரும் மலபாரின் 25-வது பதிப்பு, கொவிட்-19 நெறிமுறைகளை பின்பற்றி நடைபெறுகிறது. சுதந்திரமான, திறந்தவெளி, உள்ளடக்கிய இந்தோ-பசிபிக் மற்றும் சர்வதேச விதிகளின் படி பங்கேற்கும் நாடுகளின் உறுதியை இது வெளிப்படுத்துகிறது

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1762720

 

-----(Release ID: 1762766) Visitor Counter : 191


Read this release in: English , Urdu , Hindi